logo


1 / 3
2 / 3
3 / 3




    கல்விக்கடன்



1.

கடன் திட்டத்தின் பெயர்

கல்விக் கடன்

2.

நோக்கங்கள்

தொழில் கல்வி பயிலும்ம் மாணவர்களுக்கு இக்கடன் வழங்கப்படுகிறது.
இதில் பயிற்சி கட்டணம், தேர்வு கட்டணம், உணவு கட்டணம், தங்கும்
விடுதி கட்டணம் புத்தகங்கள் மற்றும் அவசியமான
உபகரணங்கள் ஆகியவை அடங்கும்.

3.

தொழில் கல்வி

1.

Medical

MBBS / BDS / B.V.Sc etc.,

2.

Para Medical

BPT / BPharm / BOT / etc

3.

Agriculture and cooperation

B.Sc(Agri) / B.E (Agri)

4.

Engineering

B.E/B.Tech/B.Arch/M.E/M.Tech/etc

5.

Computer Science

MCA/B.Sc (Computer Science)/ COnducted by University / Engineering COlleges / COlleges Reputed

6.

Management and Banking

BBA / M.B.A/B.B.M/M.B.M

7.

Diploma Studies

Diploma in Engineering / Diploma in Computer Science and Engineering etc

4.

தகுதியுள்ள படிப்புகள்

1.

பட்டயப் படிப்பு

ஆண்டுக்கு ரூ 50,000/- (ஐம்பதாயிரம்) அல்லது கல்லூரிக் கட்டணம். இதில் எது குறைவோ, அத்தொகை கடனாக வழங்கப்படும்

2.

பட்டப்படிப்பு ( Graduation)

ஆண்டுக்கு ரூ1,00,000/- (ஒரு லட்சம்) அல்லது கல்லூரிக்கட்டணம். இதில் எது குறைவோ, அத்தொகை கடனாக வழங்கப்படும்

3.

முதுநிலைப் பட்டப்படிப்பு

ஆண்டுக்கு ரூ1,00,000/-( ஒரு லட்சம்) அல்லது கல்லூரிக் கட்டணம், இதில் எது குறைவோ அத்தொகை கடனாக வழங்கப்படும்

4.

முதுநிலைப் பட்டப்படிப்பு

கடன் , முழு நேரக் கல்வி பயில்கின்றவர்களுக்கு மட்டும் வழங்கப்படும்

5.

இணை உறுப்பினர்

மனுதாரரும் பிணையதாரரும் வங்கியில் ரூ100/- செலுத்தி இணை உறுப்பினராக சேர வேண்டும்.

6.

பணியில் இருக்க வேண்டிய காலம்

1) அரசு மற்றும் அரசு சார்ந்த பொது நிறுவனம் வங்கிகள், புகழ்பெற்ற தனியார் நிறுவனம் ஆகியவற்றில் பணியாற்றுபவர்களின் மகன் / மகளுக்கு கடன் வழங்கலாம்.
2) மனுதாரரும் பிணையதாரரும் நிரந்தர ஊதியம் பெறும் பணியாளராக இருக்க வேண்டும்
3) இவர்கள் பணி ஓய்வு பெறுவதற்கு குறைந்தது எட்டு வருடங்கள் இருக்க வேண்டும்.
4) வேறு நபர்களுக்கு போதிய வருவாய் இருந்தால் வருமானத்தில் 4 விழுக்காடு திரும்ப செலுத்தும் சக்தியாக எடுத்துக் கொண்டு கடன் வழங்கலாம்..

7.

கடன் தொகை

1) கடன் அளவு ரூ50,000/- (ஐம்பதாயிரம்) வரை விளிம்புத் தொகை தேவை இல்லை.
2) கடன் தொகை ரூ 50,000/0 (ஐம்பதாயிரம்) த்துக்கு அதிகமானால் விளிம்புத் தொகை 10 விழுக்காடு செலுத்த வேண்டும்.

8.

தவணைக்காலம்

1) 60 மாத சமதவணைகளில் திரும்ப செலுத்தப்பட வேண்டும்.
2) முதல் தவணை செலுத்துவதற்கு இடைவெளிக்காலம், கல்லூரியில் பயிலும் காலம் + ஒரு வருடம் அல்லது கல்லூரியில் பயிலும் காலம் + பணியில் சேர்ந்த ஆறு மாதங்கள். இதில் எது குறைவோ அது முதல் தவணைக்கு இடைவெளிக்காலம். மூன்று முதல் ஐந்து வருடங்கள் மாத சம தவணைகளில் செலுத்த வேண்டும்.
3) முதல் தவணைக்கு முன்னர் உள்ள இடைவெளி காலத்தில் ஒவ் வொரு மாதமும் வட்டி மட்டும் செலுத்த வேண்டும்.

9.

வட்டி

1) நாள் நிலுவையின் அடிப்படையில் ( Outstanding amount due on daily product basis) 12 விழுக்காடு.
2) கடனுக்கான வட்டி, கடன் பெற்ற அடுத்த மாதத்திலிருந்து செலுத்த வேண்டும்.
3) தவணை தவறிய வட்டி - 3 விழுக்காடு.
4) பெண் மாணவர்களுக்கு ஒரு விழுக்காடு (1%) வட்டி சலுகை வழங்கப்படும்.
5) வட்டி விகிதம் அவ்வப்போது வழங்கப்படும் அறிவுரைகளுக்கு உட்பட்டது.

10.

கடனுக்கான ஆதாரம்

1) கடன் மனுதாரர் மற்றும் பிணையதாரர் இருவரும்,அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் அல்லது பெயர் பெற்ற பெரிய நிறுவனங்களில் நிரந்தர பணியாளர்களாக இருக்க வேண்டும். அதற்கான ஊதியச் சான்று நிறுவனங்களில் பெற வேண்டும்.
2) ரூ50,000/- வரை நபர் பிணையத்தின் அடிப்படையிலும், அதற்கு மேற்பட்ட தொகைக்கு கடனுக்கு ஈடான சொத்து அடமானம் கொடுக்கவேண்டும்.

11.

கடன் பட்டுவாடா முறை

கடன் பெறுபவரின் வேண்டுகோளுக்கிணங்க, தேவைப்படும் போது கேட்கும் தொகை முதல் வருடத்திற்கான கல்லூரி / பல்கலைக்கழக கட்டணத்தை கடன் தாரர் நேரில் செலுத்தி, கட்டணம் செலுத்தியதற்கான ஆதாரத்துடன் வங்கியில் சமர்ப்பித்து பின் பெற்றுக்கொள்ள வேண்டும். இரண்டாம் வருடத்திலிருந்து சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்திற்கு வங்கியிலிருந்து நேரடியாக செலுத்தப்படும்.

12.

இதர கட்டணம்

வங்கி நிர்ணயிக்கும் சட்ட ஆலோசகர் கட்டணம் GST குறைந்தது ரூ500/- உயர்ந்தபட்சம் ரூ.1,500/- ஆகியவற்றை கடன் பெறுபவர் செலுத்த வேண்டும்.

13.

கடனை திரும்ப பெறுதல்

கடன் தொகை வாங்கப்பட்ட நோக்கத்திற்கே பயன்படுத்த வேண்டும். படிப்பு இடையில் நிறுத்தப்பட்டால், அல்லது கடன் வேறு நோக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டால், கடன் முழுத்தொகையையும் உடனே திரும்ப செலுத்துமாறு கேட்க வங்கிக்கு உரிமை உண்டு.

14.

கொடுக்க வேண்டிய ஆவணங்கள்

1) மாணவரின் அடையாள அட்டை ( கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்டது.
2) பயிலும் கல்வி மற்றும் அதன் காலம் குறித்த சான்று.
3) படிப்பு காலம் முழுவதற்கும் உத்தேசமாக ஏற்படும் செலவு, தனித்தனியாக விவரங்களுடன் அறிக்கை.
4) மனுதாரர் மற்றும் பிணையதாரரின் ஊதியச்சான்று.
5) இருவருக்கும் குடும்ப அட்டை நகல்
6) தனிப்பட்ட அடையாளச் சான்று ( individual identification card)
7) மாணவர், கடன் பெறுபவர் மற்றும் பிணையதாரர் புகைப்படங்கள் ஊதியம் வழங்க்கும் அலுவலரிடமிருந்து படிவம் 28 ல் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.