logo


1 / 3
2 / 3
3 / 3




    மாற்றுத் திறனாளிகள் கடன்



1.

கடன் திட்டத்தின் பெயர்

மாற்றுத் திறனாளிகள் கடன்

2.

நோக்கங்கள்

மாற்றுத் திறனாளிகள் கடன்

3.

கடன் பெறுவதற்கு தகுதிகள்

1) மாற்றுத் திறனாளியின் இயலாமை குறைந்தது 40% க்கு மேல் இருக்க வேண்டும்.
2) வயது 18 நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
3) வயதில் இளையவராக இருந்தால் 14 வயதும் அதற்கு மேலும் இருக்க வேண்டும்.
4) கடன் வழங்குவது உச்ச வயது ( No upper age limit) அளவு இல்லை
5) வயது 18 முதல் 45 வரை உள்ள வேலையில் இருப்பவர்கள் (young professionals)
6) ஆண்டு வருமானம் கீழ்க்கண்டவாறு இருக்க வேண்டும்.

1) நகரப்பகுதியை சேர்ந்தவராக இருந்தால் வருவாய் ரூ5/- லட்சத்திற்கு கீழே இருக்க வேண்டும்.
2) கிராமப்பகுதியை சேர்ந்தவராக இருந்தால் வருவாய் ரூ3/ லட்சத்திற்கு கீழே இருக்க வேண்டும்.
3) கடன் வாங்கும் நோக்கத்திற்கு ஏற்றவாறு அதற்கு தேவையான கல்வி, நுட்ப தொழில் தகுதி மற்றூம் அனுபவம் ( Educational / Technical / Vocational Qualification / Experience)உடையவராக இருக்க வேண்டும்.

4.

இணை உறுப்பினர்

கடன் பெற விரும்பும் ஒவ் வொருவரும் ரூ100/- செலுத்தி வங்கியில் இணை உறுப்பினராக வேண்டும்.

5.

கடன் நோக்கம் மற்றும் அளவு

1) சிறு தொழில் துவங்குதல் ரூ25/- லட்சம் வரை
2) விவசாய நடவடிக்கைகள் ரூ10/- லட்சம் வரை
3) வாடகைக்கு வாகனம் வாங்குதல் ரூ10/- லட்சம் வரை
4) மனநிலை பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் சட்டபூர்வ பாதுகாவலர் கணவன் அல்லது மனைவிக்கு ரூ5/- லட்சம் வரை.

6.

மனைவிக்கு சுய தொழில் தொடங்குவதற்கு

1) சிறு தொழில் துவங்குவதல் ரூ25/- லட்சம் வரை
2) இளைய சிறப்பு தொழிலினர் ( young professionals) ரூ5/ லட்சம் வரை ( திட்டம் ஒன்றுக்கு

7.

தொழில் நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி

1) இந்தியாவில் படிப்புக்கு ரூ7.50 லட்சம்
2) வெளிநாட்டில் படிப்புக்கு ரூ15.00 லட்சம்

8.

தவணைக்காலம்

கடனை திரும்ப செலுத்தும் காலம் 5 ஆண்டுகள் வரை முதல் தவணைக்கான இடைவெளிக்காலம் 3 மாதங்கள்

9.

கடனுக்கான வட்டி

1) கடன் அளவு ரூ 50,000 வரை

மாற்றுத் திறனாளி கழகத்திலிருந்து மாநில கூட்டுறவு வங்கிக்கு 2 %
மாநில கூட்டுறவு வங்கியிலிருந்து மத்தியக் கூட்டுறவு வங்கிக்கு 3%
மத்தியக் கூட்டுறவு வங்கியிலிருந்து கடன் பெறுபவருக்கு 5%

2) கடன் அளவு ரூ 50,001/- முதல் ரூ 5/- லட்சம் வரை

மாற்றுத் திறனாளி கழகத்திலிருந்து மாநில கூட்டுறவு வங்கிக்கு 3 %
மாநில கூட்டுறவு வங்கியிலிருந்து மத்தியக் கூட்டுறவு வங்கிக்கு 4%
மத்தியக் கூட்டுறவு வங்கியிலிருந்து கடன் பெறுபவருக்கு 6%

3) கடன் அளவு ரூ 5/- லட்சத்திற்கு மேல் ரூ 15/- லட்சம் வரை

மாற்றுத் திறனாளி கழகத்திலிருந்து மாநில கூட்டுறவு வங்கிக்கு 4 %
மாநில கூட்டுறவு வங்கியிலிருந்து மத்தியக் கூட்டுறவு வங்கிக்கு 5%
மத்தியக் கூட்டுறவு வங்கியிலிருந்து கடன் பெறுபவருக்கு 7%

4) கடன் அளவு ரூ 15/- லட்சத்திற்கு மேல் ரூ 25/- லட்சம் வரை

மாற்றுத் திறனாளி கழகத்திலிருந்து மாநில கூட்டுறவு வங்கிக்கு 5 %
மாநில கூட்டுறவு வங்கியிலிருந்து மத்தியக் கூட்டுறவு வங்கிக்கு 6%
மத்தியக் கூட்டுறவு வங்கியிலிருந்து கடன் பெறுபவருக்கு 8%

5) கல்விக் கடன்

மாற்றுத் திறனாளி கழகத்திலிருந்து மாநில கூட்டுறவு வங்கிக்கு 1 %
மாநில கூட்டுறவு வங்கியிலிருந்து மத்தியக் கூட்டுறவு வங்கிக்கு 2%
மத்தியக் கூட்டுறவு வங்கியிலிருந்து கடன் பெறுபவருக்கு 4%

10.

குறிப்பு

1) பெண் பயனாளிகளுக்கு வட்டி 1% குறைவு ( ஆண்களுக்கு 5% பெண்களூக்கு 4%)
2) மனநிலை பாதிக்கப்பட்டவர், VH , HH போன்றவர்கள் - ஆண் / பெண் இருபாலருக்கும் வட்டி 0.5% குறைவு

11.

பிணையம்

1. கடன் அளவு ரூ25,000/- வரை
தேவைப்படும் பிணையம் - அரசு பொதுத்துறை, வங்கியில் பணியாற்றும் ஒரு நபர் பிணையம்

2. கடன் அளவு ரூ25,000/- க்கு மேல் ரூ50,000/- வரை
தேவைப்படும் பிணையம் - மேலே கூறப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றும் இருநபர் பிணையம்

3. கடன் அளவு ரூ25,000/- க்கு மேல்
தேவைப்படும் பிணையம் - மேலே கூறப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றும் இருநபர் பிணையம் மற்றும் அசையா சொத்து அடமானம்

12.

இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

1) இயலாமைச் சான்று
2) வருவாய் சான்று
3) பிறந்த நாளுடன் வயதுச் சான்று
4) கல்வித் தகுதிச் சான்று
5) இன/ சமுதாயச் சான்று
6) நோக்கத்துக்கேற்ப தேவைப்படும் திட்ட அறிக்கை
7) கடன் நோக்கத்திற்கு ஏற்ப விலைப்புள்ளி பட்டியல்