logo


1 / 3
2 / 3
3 / 3




    தானிய ஈட்டு கடன்



1.

கடன் திட்டத்தின் பெயர்

தானிய ஈட்டு கடன்

2.

பரிந்துரை

இக்கடன் ஒழுங்குமுறை விற்பனைக்குழுவின் (Rregulated Market) பரிந்துரையின் அடிப்படையில் மத்திய வங்கி வழங்கலாம்

3.

தானியங்கள்

நெல் பருத்தி வத்தல் சோளம் கம்பு மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக்குழு பரிந்துரைக்கும் தானியங்கள்

4.

கடன் அளவு

ஒழுங்குமுறை விற்பனைக்குழுவின் கிட்டங்கியில் வைத்துள்ள தானியங்கள் மதிப்பில் 50%

5.

மதிப்பீடு

தானியத்தின் மதிப்பை விற்பனைக்குழு மதிப்பீடு செய்து வங்கிக்கு பரிந்துரைக்க வேண்டும். மதிப்பீடு சந்தை விலையில் முடிவு செய்யப்பட வேண்டும்.

6.

உச்ச அளவு கடன்

ஒரு நபருக்கு உச்ச அளவாக ரூ50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம்) கடனாக அனுமதிக்கலாம்

7.

தவணைக்காலம்

கடனின் தவணைக்காலம் மூன்று மாதங்கள்

8.

வட்டி

தானிய ஈட்டுக்கடனுக்கு வட்டி 13.5% தவணை தவறிய வட்டி 3% வட்டி விகிதம் அவ்வப்போது வழங்கும் அறிவுரைகளுக்கு உட்பட்டது.

9.

கடனை திரும்ப செலுத்துதல்

கடன் வசூல் பொறுப்பை ஒழுங்குமுறை விற்பனைக்குழு ஏற்க வேண்டும்.

10.

உறுதிமொழி

தானிய ஈட்டுக்கடன் விண்ணப்பத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்குழுவின் பரிந்துரையும் கடனை திரும்ப செலுத்துவதற்கான உறுதிமொழியும் பெறப்பட வேண்டும்.

11.

இணை உறுப்பினர்

கடன் பெறும் விவசாயிகள் மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ100/- செலுத்தி இணை உறுப்பினராகச் சேரவேண்டும்.

12.

ஆவணங்கள்

1) தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம் அல்லது வட்ட விற்பனை சங்கத்தில் உறுப்பினராக உள்ளார் என்பதற்கு ஆதாரம்.
2) குடும்ப அட்டை நகல் அல்லது விவசாய காசுக்கடன் அட்டை ( Kissan Credit Card) உறுப்பினராக உள்ளார் என்பதற்கு ஆதாரம்.
3) விற்பனைக்குழு பரிந்துரைக்கும் இதர விவசாயிகல்
4) புகைப்படம்