1. | கடன் திட்டத்தின் பெயர் |
தனிநபர் காசுக்கடன் |
---|---|---|
2. | நோக்கங்கள் |
1) வணிகம் செய்யும் தனிநபர் |
3. | தகுதிகள் / நிபந்தனைகள் |
1) மாவட்டத்தில் பதிவு சான்றிதழ் பெற்று வணிகம் அல்லது தொழில் செய்ய வேண்டும். |
4. | காசுக் கடன் கணக்கு ஆதாரம் |
1) காசுக்கடன் நிலுவை அளவுக்கு தேவையான ஆதாரம் ( சரக்கு அல்லது பொருட்கள் இருப்பு) காட்டப்பட வேண்டும். |
5. | பிணையம் |
கடன் தொகை அளவுக்கு 160 விழுக்காடு குறையாமல் அசையா சொத்து அடமானம் கொடுக்க வேண்டும் |
6. | கடன் தொகை |
கடண் தொகை அதிக அளவாக ரூ5/- லட்சம் வரை அனுமதிக்கலாம் |
7. | தவணைக்காலம் |
காசுக்கடன் கணக்கை ஓராண்டு முடிந்ததும் புதுப்பிக்க வேண்டும். |
8. | வட்டி |
நிலுவைத் தொகைக்கு வட்டி 12% ( விழுக்காடு) காசுக்கடன் கணக்கு புதுப்பிக்கப்படாமல் அல்லது நிலுவைக்கு ஏற்றவாறு இருக்க வேண்டிய இருப்பில் ஆதாரக்குறைவு ஏற்பட்டால், கூடுதலாக 3% வட்டி வசூலிக்கப்பட வேண்டும். |
9. | குறைந்த நிலுவை |
காசுக்கடனில் குறைந்த நிலுவை ரூ2,000/- (இரண்டாயிரம்) அல்லது காசுக்கடன் அளவில் 1% இதில் எது அதிகமோ அத்தொகை காசுக்கடனில் குறைந்த நிலுவையாக இருக்க வேண்டும். இந்த அளவுக்கு குறையக்கூடாது. |
10. | கட்டணங்கள் |
சட்ட ஆலோசகர் கட்டணம் ரூ500/- |
11. | காப்பீடு |
அடமானம் கொடுக்கும் அசையா சொத்து வீடு மற்றும் இருப்பு சரக்குகள் ( Stocks) ஆகியவை மத்திய வங்கி கூட்டுப்பொறுப்பில் காப்பீடு மனுதாரரால் செய்யப்பட வேண்டும் |
12. | கடன் அனுமதி |
காசுக்கடன் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு உட்பட்டு கணக்கில் வரவு செலவு செய்ய அனுமதிக்க வேண்டும். |
13. | சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் |
1) அடமானம் கொடுக்கும் அசையா சொத்தின் மூலப்பத்திரம் |