வங்கியின் குறிக்கோள் :
அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கைதரத்தை மேம்படுத்த பல்வேறு வங்கிச் சேவைகளை முழு ஈடுபாடுடன் நவீன முறையில் விரைவாகவும் நேர்மையாகவும் பாதுகாப்புடனும் வழங்கி மாவட்டத்தின் முதன்மை வங்கியாக தன்னிறைவுடன் திகழ்வதே எங்கள் நோக்கம். வங்கியின் செயல் இலக்கு : வங்கி சேவைகளையும் நிதி உதவி திட்டங்களையும் தொழில்நுட்ப வளர்ச்சியையும் பயன்படுத்தி திருநெல்வேலி மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் பொருளாதார மேம்பாட்டின் பயன் கள் சென்று அடைய வங்கிப் பணிகளை மேற்கொள்ளுதல். முதன்மை செயல்பாடுகள்:
1. பொது மக்களிடமிருந்து சேமிப்பை திரட்டுதல் மற்றும் அவர்களது பணத்திற்கு பாதுகாப்பு அளித்தல்.
2. திரட்டப்பட்ட நிதியினை கொண்டு திருநெல்வேலி மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பொருளாதார மேம்பாடு அடைய கடன் திட்டங்கள் மூலம் நிதி உதவி வழங்குதல்.
3. அரசின் பல்வேறு வகை நலத்திட்டங்களின்படி ( மாற்றுத்திறனாளிக் கடன்,டாம்கோ, டாப்செட்கோ மற்றும் விவசாய கடன் வட்டி மானியம் ) தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு கடன் திட்டங்கள் மூலம் பொருளாதார மேம்பாடு அடைய உதவுதல்.
4. மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை கூட்டுறவுச் சங்கங்களுக்கும் நிதி வழங்கும் வங்கியாக செயல்படுதல்.
5. நபார்டு , மத்திய அரசு மற்றும் மாநில அரசின் மானியங்களுடன் கூடிய கடன் திட்டங்கள் நேரடியாகவும் இணைப்புச் சங்கங்கள் மூலமாக மாவட்ட முழுவதும் உள்ள மக்களை சென்று சேர உதவுதல்.