logo


1 / 3
2 / 3
3 / 3




    நுகர்வோர் கடன்



1.

கடன் திட்டத்தின் பெயர்

நுகர்வோர் கடன்

2.

கடன் தொகை ( அதிக பட்சம்)

கடன் பெறுபவர் வாங்குகின்ற மாத ஊதியத்தைப் போன்று 4 ( நான் கு) மடங்குகள் அல்லது விலைப்பட்டியலில் 90 விழுக்காடு அல்லது ரூ1,00,000/- ( ஒரு லட்சம்) இவற்றில் எது குறைவோ அத்தொகை

3.

கடன் நோக்கம்

1)வீட்டு பயன்பாட்டு பொருள்கள் / கருவிகள்
2) மின்சாதன பொருள்கள்
1 3) இரு சக்கர வாகனம் ( 500 சிசி க்கு மேல்)

4.

தவணைக்காலம்

36 மாத சம தவணைகள் வட்டியுடன் சேர்த்து ( EMI).

5.

விண்ணப்பதாரரின் தகுதி

மாத வருவாய் பெறூம் கீழ்க்கண்ட பணியாளர்கள் கடன் பெறலாம்

1) மத்திய மாநில அரசு மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்கள்
2) நிதி நிறுவனங்கள்
3) கல்லூரி மற்றும் பள்ளிகள்
4) சிறிய வணிகர்கள்
5) கடன் பெறுபவர்களுக்கு கடன் வழங்கக்கூடாது.
6) இரு சக்கர வாகன கடன் பெறுபவராக இருப்பின் நடப்பிலுள்ள ஓட்டுநர் உரிமம் பெற்றவராக இருக்கவேண்டும்.
7) நுகர்வோர் கடன் புதிய பொருட்களுக்கு மட்டுமே வழங்கவேண்டும்

6.

இணை உறுப்பினர்

வங்கியில் கணக்கு வைத்திருபவராக இருக்க வேண்டும்.

1) கடன் பெறுபவரும் பிணையதாரரும் ரூ100/- செலுத்தி இணை உறுப்பினராக வேண்டும்.
2) கடன் பெறுபவர் மற்றும் பிணையதாரர் வங்கியின் செயல் எல்லையில் வசிக்க வேண்டும்.
3) கடன் பெறுபவர் கணக்கு திறக்க வேண்டும்.

7.

விளிம்புத் தொகை ( Margin Money)

கடன் பெறுபவர் அவரது பங்காக 10% வங்கியில் செலுத்த வேண்டும்.

8.

சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

1) இணை உறுப்பினர் படிவம்
2) கடன் வாங்குபவர் மற்றும் பிணையதாரர் ஊதியம் / வருவாய் சான்றிதழ்
3) பொருள் வினியோகம் செய்யும் நிறுவன விலைப்புள்ளி (Quotation)

9.

வட்டி விழுக்காடு

1) வட்டி 12%
2) தவணை தவறிய வட்டி 3%

10.

பிணையம்

1) கடன் தொகையில் வாங்கப்படும் பொருட்கள் மற்றும் கருவிகள் வங்கிக்கு ஈட்டாக (Hypothecation) காட்டப்பட வேண்டும் 2) ஒரே குடும்பத்தை சேர்ந்தவர் பிணையதாரராக இருக்ககூடாது.

11.

மாத வருவாய்

1) பணியில் இருப்பவர்களுக்கு வீட்டுக்கு எடுத்துச் செல்லும் ஊதியம் மொத்த ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்குக்கு (1/3) குறையக்கூடாது. 2) மற்றவர்களுக்கு மாத நிகர வருவாய் கவனமாக கண்க்கிட வேண்டும். மாத தவணை செலுத்துவதற்கு போதிய வருவாய் இருக்க வேண்டும்.

12.

காப்பீடு ( Insurance)

1) இரு சக்கரவாகனமெனில் கடன் பெறுபவர் மற்றும் வங்கி கூட்டுப் பெயரில் காப்பீடு செய்ய வேண்டும். ஒவ் வொரு ஆண்டும் கடன் தாரர் செலவில் காப்பீடு புதுப்பிக்கப்படுவதை மேலாளர் உறுதி செய்ய வேண்டும்.
2) பதிவுப் புத்தகத்தில் (R.C.Book) வாகனம் வங்கியின் பெயருக்கு ஈடாக (HYpothecation) உள்ளது என்பதை காட்ட வேண்டும்.
3) பதிவு சான்றிதழ் நகல் வங்கியில் ஒப்படைக்கப்பட வேண்டும்,
4) இரண்டு சாவிகளில் ஒன்றை வங்கியில் ஒப்படைக்க வேண்டும்

13.

கடன் பட்டுவாடா செய்யும் முறை (Mode of Disbursement)

1) கடன் பெறுபவர் செலுத்தியுள்ள 10% தொகையும் சேர்த்து, வாகனம் பொருள் கருவி ஆகியவை வழங்கும் நிறூவனத்திற்கு காசோலை அல்லது வரைவோலையாக வழங்கப்படும்.
2) பொருட்கள் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரிடம் வாங்கப்பட வேண்டும்.
3) கடன் அனுமதிக்கப்பட்ட பின்னர் காப்பீடு செய்யப்பட்டதற்கான சான்று கொடுக்க வேண்டும்.
4) வாகனமாக இருந்தால் R.C புத்தக நகல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.