logo


1 / 3
2 / 3
3 / 3




    திருத்தியமைக்கப்பட்ட உழவர் காசுக்கடன்



1.

கடன் திட்டத்தின் பெயர்

திருத்தியமைக்கப்பட்ட உழவர் காசுக்கடன்

2.

தற்போதைய நடைமுறையில் மாறுதல்

1) ஓவ் வொரு ஆண்டும் பயிர்வாரியாக நிர்ணயிக்கப்பட்ட கடன் அளவை கீழ்க்கண்டவாறு கணக்கிட வேண்டும். பயிர்வாரியான கடன் அளவு + காப்பீடு கட்டணம் X பயிர் செய்ய இருக்கும் நிலத்தின் அளவு கடனளவில் 10% ( அறுவடைக்குப்பின்னர் ஏற்படும் நுகர்வு அல்லது செலவுக்காக ) + கடனளவில் 20% (விவசாய சொத்துக்களின் பராமரிப்புக்காக)
2) முன்பு கடன் தேவையை கணக்கிட ஏக்கருக்கு நிர்ணயிக்கப்பட்ட கடணளவு மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டது.
3) மிகச்சிறு விவசாயிகளுக்கு கடன் அளவை கணக்கிட இலகுவான முறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது,.
4) ஒரு முறை தயாரிக்கப்பட்ட கடன் அளவை 5 (ஐந்து) ஆண்டுகள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம். (முன்னர் மூன்று (3) ஆண்டுகள் வரை மட்டுமே பயன்படுத்தப்பட்டன)
5) பயிர்கடனில் விளிம்பு ஏற்கனவே சேர்க்கப்பட்டிருப்பதால் தனியாக விளிம்பு வலியுறுத்த வேண்டியதில்லை.
6) கணக்கில் எடுக்கப்பட்ட பணம் 12 மாதங்களுக்கு மேல் நிலுவையாக இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. அதுபோன்று எந்த நேரத்திலும் பணம் நிலுவை இல்லாமல் முழுமையாக எடுக்கப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை.
7) கடனை குறித்த தவணைக்குள் செலுத்தினால் பெறுகின்ற வட்டி, ஊக்கத்தொகை அல்லது அரசு வழங்கும் சலுகை இந்திய அரசு மற்றும் மாநில அரசின் விதிகளுக்குட்பட்டு வழங்கப்படும்.
8) ரூ.3.00 லட்சம் அளவு வரை பரிசீலனைக்கட்டணம் வசூலிக்க வேண்டியதில்லை.
9) முதல் முறை பணம் வழங்கும்போது மட்டும் ஆவணப்படுத்தப்பட்டால் போதுமானது. பின்னர் உற்பத்தி செய்யப்பட்ட அல்லது செய்ய இருக்கும் பயிர் குறித்து விவசாயிகள் அறிவிப்பு கொடுத்தால் போதுமானது.
10) விவசாயிகள் காசுக்கடன் மற்றும் சேமிப்பு கணக்கு என தனித்தனியாக இரண்டு கணக்காக வைத்துக்கொள்வதற்குப் பதிலாக விவசாய காசுக்கடன் மற்றும் சேமிப்பு கணக்கு என ஒரே கணக்காக வைத்துக்கொள்ளலாம். இக்கணக்கில் இருப்பாக உள்ள நிலுவிக்கௌ ( Credit Balance) சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தில் வட்டி வழங்கலாம்.
11) கடன் வழங்குவதை பல்வேறு முறையில் மேற்கொள்ளலாம். ATM /POS /Mobile hand set ஆகிய சாதனங்கள் மூலமும் வழங்கலாம்.
12. எதிர் காலத்தில் விவசாய காசுக்கடனை SMART CARD மற்றும் DEBIT CARD மூலம் வழங்கும் திட்டமும் உள்ளது. மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கியின் மேலே கூறப்பட்ட தேசிய வங்கியின் அறிவுரைகளை தவறாது பின்பற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளும் நடைமுறைகளை தவறாது பின்பற்றுவதை உறுதி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

3.

கடன் அளவு செயல்படும் காலம்

ஏப்ரல் முதல் நாள் முதல் மார்ச் மாதம் 31 ஆம் நாள் வர கடனை வரவு செலவு செய்ய வேண்டும்.

4.

வட்டி விகிதம்

விவசாயிகளுக்கு 7% (விழுக்காடு) ரூ.3/- லட்சம் கடன் வரை இவ்விகிதத்தில் வழங்கலாம்.

5.

வட்டி சலுகை

இந்திய அரசின் வட்டி சலுகை தொடர்ந்து வழங்கப்படும்

6.

மத்தியக்கூட்டுறவு வங்கி மறுநிதி பெறுவதற்கு தகுதிகள்

1. வங்கியில் முந்தைய ஆண்டின் தனிக்கை முடிக்கப்பட்டிருக்க வேண்டும். 2) வங்கிகள் ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1949 பிரிவு 11 ஐ நிறைவு செய்யாத வங்கிகள் மறுநிதி பெறுவதற்கு தகுதி இல்லாதவையாகும். ஆனால் இதற்கான விதிவிலக்கு விண்ணப்பம் தேசிய வங்கியால் முறையாக ஒப்புதல் பெற்ற பரிந்துரைக்கப்பட்டு இந்திய தலைமை வங்கி அல்லது இந்திய அரசின் ஆனை அல்லது அனுமதியை எதிர்பார்த்த ஓராண்டுக்கு மேல் தாமதமாகமல் இருந்தால் அவ்வங்கியின் மனு பரிசீலனை செய்யப்படும்,
3)மத்தியக் கூட்டுறவு வங்கியின் உரிமம் ஏற்கனவே முறுக்கப்பட்டிருந்தால் அல்லது மறுப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தால் அவ்வங்கி மறுநிதி பெற இயலாது.
4) வைத்தியநாதன் குழுவின் பரிந்துரை ஏற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட மாநிலங்களிலுள்ள வங்கிகளுக்கு சிறப்பினமாக கருதி விதிவிலக்கு வழங்கப்படும். அதன்படி பிரிவு 11ஐ வங்கி நிறைவு செய்யாமல் இருந்தாலும் தேசிய வங்கியின் பரிந்திரை ஓராண்டுக்கு மேலாக தாமதமாக இருந்தாலும் விதிவிலக்கு வழங்குவதற்கு பரிசீலிக்கப்படும்.
5)தகுதி இல்லாத மத்தியக் கூட்டுறவு வங்கிகளைப் பொறுத்தவரையில் மாநில கூட்டுறவு வங்கி அல்லது அருகிலுள்ள மத்தியக்கூட்டுறவு வங்கி தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களின் துணை விதிகளுக்கு உட்பட்டு மறுநிதி பெறலாம்.
6) இருப்பினும் அனைத்து மத்தியக்கூடுறவு வங்கிகளும் விவசாயக்கடன் அட்டை திட்டத்தை செயல்படுத்துவதில் முன்னுரிமையாக செயல்பட தேசிய வங்கி அறிவுரை வழங்கியுள்ளது. நகை அடமானத்தின் அடிப்படையில் வழங்கும் விவசாயக்கடன் கூட்டுப் பொறுப்புக்குழுவுக்கான விவசாயக்கடன், ஆகியவை வழங்க நிர்ணயிக்கப்பட்ட அளவின்படி கடன் மனு தயாரிக்கப்பட வேண்டும்.

7.

தொடர் சங்கங்களின் கவனத்திற்கு

1) குறுகிய மற்றும் மத்திய காலக்கடன் களில் 70 விழுக்காடு நலிவுற்றவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
2) ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு குறுகிய காலக்கடன் குறைந்தது, 60 விழுக்காடு வழங்கவேண்டும். மத்திய காலக் கடன் அவர்கலுக்கு குறைந்தது 30 விழுக்காடு வழங்கவேண்டும்.
3)மகளிர்க்கு குறைந்தது 10 விழுக்காடு வழங்கவேண்டும்.
4) உடல் ஊனமுற்றோர், முன்னாள் இராணுவத்தினருக்கு தனித்தனியாக ஒரு விழுக்காடு வழங்கவேண்டும்.
5) புதிய உறுப்பினர்களூக்கு 30 விழுக்காடு வழங்க வேண்டும்.

8.

குறிப்பு

1) ஒவ் வொரு ஆண்டும் பயிர்வாரியாக ஏக்கருக்கு கடன் அளவு நிர்ணயிக்கப்பட்டு பருவ கால பட்டியலும் அடங்கிய குறிப்பு வெளியிடப்படுகிறது. இதை பின்பற்றி விவசாயக் கடன் கள் வழங்கப்படவேண்டும்.
2) கடன் அளவில் உரப்பகுதியில் 35 விழுக்காடுக்கு தொழு உரம் வாங்குவதற்கு ரொக்கமாக அனுமதிக்கலாம். இது தொடர்பாக உறுப்பினர்களிடம் ஒப்புதல் சான்று பெற வேண்டும்.

9.

காப்பீடு

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் பயிர்கடன் கள் , அனுமதிக்கும் போது தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும் அதன் விபரங்களை களமேலாளருக்கு தொடக்கக்கூட்டுறவு சங்க செயலாளர்கள் உரிய படிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

10.

தனி நபர் விபத்துக் காப்பீட்டுத் திட்டம்

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் விவசாயக் கடன் அட்டைத் திட்டத்தின் கீழ் கடன் பெறும் அனைவரையும் தனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தவறாது சேர்க்க வேண்டும்.
2. நகையீட்டின் பேரில் பயிர்க்கடன் வழங்கும்போது பயிர் காப்பீடு செய்யும் நடைமுறைப் பின்பற்றவேண்டும்.
3) தொடக்கக்கூட்டுறவுச் சங்கங்கள் பயிர்வாரியான கடன் அளவை சங்க விளம்பர பலகையில் எழுதி அனைத்து விவசாயிகளுக்கும் தெரியுமாறு வைக்க வேண்டும்.