logo


1 / 3
2 / 3
3 / 3




    வெள்ளாடு வளர்ப்பு



1.

கடன் திட்டத்தின் பெயர்

வெள்ளாடு வளர்க்க கடன்

2.

நோக்கங்கள்

வெள்ளாடு வளர்க்க கடன் வழங்கலாம்

3.

தகுதியானவர்கள்

1) சிறு மற்றும் மிகச்சிறு விவசாயிகள்
2) விவசாயக்கூலிகள்
3) மேய்ச்சலுக்கு சொந்த நிலம் அல்லது மேய்ச்சலுக்கு இடவசதி இருக்க வேண்டும்
4) ஆடு வளர்ப்பில் அனுபவம் உள்ளவர்கள்
5) சொந்தமாக வீடு இருக்க வேண்டும்.

4.

கடன் அளவு

கடன் அளவு ரூ33000 முப்பத்து மூன்றாயிரம்

5.

ஆடுகள் எண்ணிக்கை

வெள்ளாடுகள் எண்ணிக்கை பெண் ஆடுகள் 20, ஆண் ஆடுகள் 1

6.

தீவனம்

ஆட்டுத் தீவன வசதி சொந்தமாகவோ அல்லது உள்ளூரில் அதற்கான வசதியோ இருக்க வேண்டும்.

7.

காப்பீடு

1) அனைத்து ஆடுகளுக்கும் காப்பீடு செய்யப்பட வேண்டும்,
2) கடன் தொகை முழுமையாக செலுத்தப்படும் வரை ஒவ் வொரு ஆண்டும் காப்பீடு புதுப்பிக்கப்பட வேண்டும்.

8.

மருத்துவ வசதி

உள்ளூரில் அல்லது அருகில் கால்நடைமருத்துவ வசதி இருக்க வேண்டும்.

9.

ஆட்டுத் தொழுவம்

1) ஆடுகளின் பாதுகாப்புக்கு தொழுவம் அமைக்க வேண்டும்.
2) தேவையான சாதனங்கள் மற்றும் தொழுவம் அமைக்க ஏற்படும் செலவு கடன் தொகையில் சேர்க்கப்பட்டுள்ளது. ( ரூ3000/- )

10.

பிணையம்

கடன் அளவை போன்று ஒரு மடங்கு சொத்து அடமானம் கொடுக்க வேண்டும்.

11.

கடன் காலம்

கடனின் காலம் 5 ஆண்டுகள்

12.

முதல் தவணை செலுத்துதல்

முதல் தவணை 2 மாதங்களுக்குப் பின்னர் செலுத்தப்பட வேண்டும்.

13.

உறுப்பினர்

1) கடன் கோருபவர் தொடக்கச் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும்.
2) கடன் விண்ணப்பம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தின் மூலம் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
தவணை தவறிய வட்டி 2%

14.

வட்டி

கடனுக்கான வட்டி 12%
தவணைத் தவறிய வட்டி 2%

15.

இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

மாடு ஆடு கோழி வளர்ப்பு ஆகிய இனங்களுக்கு கீழ்க்கண்ட ஆவணங்கள் இனைக்கப்பட வேண்டும்.
1) தனிநபர் அடையாளச் சான்றூ
2) குடியிருப்பு சான்று
3) சொந்த வீடு உள்ளது என்பதற்கான சான்று
4) வீட்டு வரி, தண்ணீர் வரி, மின் கட்டணம் செலுத்தப்படுவதற்கான ரசீது
5) சொந்த அல்லது வீட்டுக்கான மூல மற்றும் உரிமை ஆவணங்கள்
6) வில்லங்கச் சான்று - 13 ஆண்டுகளூக்கு
7) பட்டா வட்டாச்சியாளரால் வழங்கப்பட்டது
8) புகைப்பட நகல் மூன்று
9) திட்ட அறிக்கை

16.

கடன் அனுமதிக்கு பின்னர்

1) வங்கியின் பெயரையும் சேர்த்து வில்லங்கச்சான்று பெற வேண்டும்'
2) ஆடுகல் மாடுகள் கோழிகள் வாங்கப்பட்டுள்ளது என்பதற்கு கால்நடை மருத்துவரின் சான்று.