1. | கடன் திட்டத்தின் பெயர் |
தானிய ஈட்டு கடன் |
---|---|---|
2. | பரிந்துரை |
இக்கடன் ஒழுங்குமுறை விற்பனைக்குழுவின் (Rregulated Market) பரிந்துரையின் அடிப்படையில் மத்திய வங்கி வழங்கலாம் |
3. | தானியங்கள் |
நெல் பருத்தி வத்தல் சோளம் கம்பு மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக்குழு பரிந்துரைக்கும் தானியங்கள் |
4. | கடன் அளவு |
ஒழுங்குமுறை விற்பனைக்குழுவின் கிட்டங்கியில் வைத்துள்ள தானியங்கள் மதிப்பில் 50% |
5. | மதிப்பீடு |
தானியத்தின் மதிப்பை விற்பனைக்குழு மதிப்பீடு செய்து வங்கிக்கு பரிந்துரைக்க வேண்டும். மதிப்பீடு சந்தை விலையில் முடிவு செய்யப்பட வேண்டும். |
6. | உச்ச அளவு கடன் |
ஒரு நபருக்கு உச்ச அளவாக ரூ50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம்) கடனாக அனுமதிக்கலாம் |
7. | தவணைக்காலம் |
கடனின் தவணைக்காலம் மூன்று மாதங்கள் |
8. | வட்டி |
தானிய ஈட்டுக்கடனுக்கு வட்டி 13.5% தவணை தவறிய வட்டி 3% வட்டி விகிதம் அவ்வப்போது வழங்கும் அறிவுரைகளுக்கு உட்பட்டது. |
9. | கடனை திரும்ப செலுத்துதல் |
கடன் வசூல் பொறுப்பை ஒழுங்குமுறை விற்பனைக்குழு ஏற்க வேண்டும். |
10. | உறுதிமொழி |
தானிய ஈட்டுக்கடன் விண்ணப்பத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்குழுவின் பரிந்துரையும் கடனை திரும்ப செலுத்துவதற்கான உறுதிமொழியும் பெறப்பட வேண்டும். |
11. | இணை உறுப்பினர் |
கடன் பெறும் விவசாயிகள் மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ100/- செலுத்தி இணை உறுப்பினராகச் சேரவேண்டும். |
12. | ஆவணங்கள் |
1) தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம் அல்லது வட்ட விற்பனை சங்கத்தில் உறுப்பினராக உள்ளார் என்பதற்கு ஆதாரம். |