1. | கடன் திட்டத்தின் பெயர் |
வீடு கட்டுவதற்கு கடன் |
---|---|---|
2. | கடன் வழங்கும் நோக்கங்கள் |
1) புதிய வீடு கட்டுதல் / அடுக்குமாடி குடியிருப்பு வாங்குதல் |
3. | நிபந்தனைகள் |
1) விண்ணப்பதாரர் நிரந்தரப்பணியில் உள்ளவராகவோ, அல்லது தொழில் செய்பவராகவோ அல்லது நிரந்தர மாத வருமானம் உள்ளவாராகவோ இருக்கவேண்டும். |
4. | பிணையம் |
புதிய வீடு அல்லது கட்டப்பட்ட வீடு வங்கிக்கு அடமானம் செய்து கொடுக்கப்பட வேண்டும். இணைந்து விண்ணப்பம் கொடுப்பவர்கள், அடமானத்தில் அவர்களது வாரிசுகளையும் காட்ட வேண்டும். அடமானத்திலும் புரோநோட்டிலும் கூட்டாக கையொப்பமிட வேண்டும். |
5. | இணை உறுப்பினர் |
மனுதாரரும் பிணையதாரரும் ரூ100/- செலுத்தி, இணை உறுப்பினராக வேண்டும். 18 வயது நிரம்பியவராகவும், வங்கியில் செயல் எல்லையில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.. |
6. | கடன் அளவு |
1) வீடு வாங்க்குதல் மற்றும் விரிவுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்கு உச்ச அளவாக ரூ.20/- லட்சம் வரை கடன் அனுமதிக்கப்படும். வங்கியால் நியமிக்கப்பட்ட பொறியாளரிடம் திட்ட மதிப்பீடு மற்றும் வீட்டின மதிப்பீடு பெறவேண்டும். |
7. | மனுதாரர் ஏற்க வேண்டிய சொந்த நிதியின் அளவு |
1) ரூ.10/- லட்சம் வரை உள்ள கடனுக்கு பொறியாளர் மதிப்பீட்டில் - 15%
|
8. | தவணை காலம் |
1) மனுதாரர் 70 வயதை நிறைவு செய்வதற்கு முன்பே, அசல் மற்றும் வட்டியை திரும்ப செலுத்தும் அளவில், தவணை நிர்ணயிக்கப்பட வேண்டும். |
9. | வருமானம் |
1) மனுதாரர் மாத ஊதியம் பெறுபவராக இருந்தால், வீட்டுக்கு எடுத்துச் செல்லும் ஊதியம் (Home Carrying Salary) மொத்த ஊதியத்தில் 30 விழுக்காட்டுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
|
10. | வட்டி |
12 % |
11. | கடனுக்கு ஆதாரம் |
அனைத்து நோக்கங்களுக்கும், வீட்டை வங்கிக்கு அடமானம் கொடுக்க வேண்டும். |
12. | சட்ட ஆலோசகர் மற்றும் G S T கட்டணம் |
1) அனுமதிக்கும் கடன் தொகைக்கு GST வசூலிக்கப்பட வேண்டும். இது குறைந்தது ரூ 1,500/-ம் உச்ச அளவாக ரூ2,500/-ம் வசூலிக்க வேண்டும். |
13. | காப்பீடு |
1) வீடு, வங்கியின் கூட்டுப்பெயரில் காப்பீடு செய்யப்பட வேண்டும். நெருப்பு , வெள்ளம், புயல் ஆகியவற்றுக்கும், கடன் மற்றும் உத்தேச வட்டி சேர்த்து காப்பீடு செய்ய வேண்டும்.
. |
14. | கடன் பட்டுவாடா முறை |
1) கடன் அனுமதியில் காணப்படும் நிபந்தனைகள் நிறைவு செய்யப்படவேண்டும். தனது சொந்த நிதியில் கட்டிடப்பணியை தொடங்க வேண்டும். சொந்த நிதியை பயன்படுத்தியதற்கு பொறியாளர் சான்று கொடுத்த பின்னர் கடன் தொகையில் 20% முதல் தவணை பட்டு வாடா செய்ய வேண்டும்.
|
15. | இணைக்க வேண்டிய ஆவணங்கள் |
1) சொத்துக்களுக்கான மூலப்பத்திரம். |
16. | கடனை முடிவுகட்டுதல் ( Foreclosure) |
1) அடமானம் கொடுக்கப்பட்ட சொத்தின் மதிப்பு குறைந்து, அந்த குறைவை ஈடுசெய்ய, கூடுதல் அடமானம் கொடுக்காமல் இருந்தால் , அல்லது மதிப்பு குறைந்த அளவுக்கான் தொகையை செலுத்தாமல் இருந்தால் , கடனை தவணைக்கு முன் முடிவு கட்டலாம். |
17. | கடனை திரும்ப செலுத்துதல் |
1) மாதாந்திர தவணை தொகையை ( Equal Monthly Installment (EMI)) ஒவ்வொரு மாதமும் 10ம் நாளுக்கு முன் வட்டியுடன் செலுத்த வேண்டும். |
18. | பொதுவானவை |
1) கடன் மனுவில் அனைத்து தகவல்களும் இணைப்புகளும் உள்ளனவா, என்பதை மேலாளர் உறுதி செய்ய வேண்டும். சட்ட ஆலோசகரின் கருத்துக்குப் பின்னர், கடன் மனு அனுமதிக்கும் பரிசீலிக்கப்படவேண்டும். |
19. | கடன் அனுமதிக்குப் பின்னர் |
காப்பீடு, ஒவ்வொரு ஆண்டும் கடன் வாங்கியவரால் புதுப்பிக்கப்படுவதை, வங்கி உறுதி செய்ய வேண்டும். |