logo


1 / 3
2 / 3
3 / 3




    நகைக் கடன்



1.

கடன் திட்டத்தின் பெயர்

நகைக் கடன்

2.

கடன் பெற தகுதி உள்ளவர்கள்

1) நாணயமான நல்ல வாடிக்கையாளர்கள்
2) எவ்விதமான கேள்விக்கும் இடம் இல்லாமல் உண்மையான நகை உரிமையாளர்கள்
3) பெரும்பான்மையாக, வங்கியின் செயல் எல்லையில் வசிப்பவர்களுக்கே நகைக்கடன் வழங்க வேண்டும்.
4) 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

3.

இணை உறுப்பினர்

கடன் பெறுபவே வங்கியில் ரூ100/- செலுத்தி இணை உறூப்பினராக வேண்டும்.

4.

நகைக் கடன் பெற தகுதி இல்லாதவர்கள்

1) 18 வயது நிரம்பாதவர்கள் (Minor)
2) மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ( Lunatic)

5.

கடன் பெற தகுதியில்லாத தங்கம் / நகைகள்

1) மூன்றாவது நபரின் தங்க நகைகள் ( Third Party)
2) சுத்தமான தங்கங்கள் ( Primary Gold)
3) தங்க கட்டிகள் ( Gold Bars)
4) 22 காரட்டுக்கு ( Carat) குறைவாக உள்ள தங்க நகைகள்
5) ஏற்கனவே அடமானம் வைக்கப்பட்ட நகையை மீண்டும் அடமானம் ( Repledge) வைத்தல்

6.

கடனில் நோக்கத்தை அறிதல்

குடும்ப காரணங்களுக்காகவும் கல்வி மருத்துவம் சிறுவணிகம் தொழில் போன்ற முன்னுரிமை காரணங்களுக்காகவும் கடன் பெறலாம்.
எந்த நோக்கத்திற்காக, நகைக்கடன் வாங்குகிறார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இதை நகைக்கடன் விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும். இதன் நோக்கம் வாங்கப்பட்ட கடன் தவறாக பயன்படக்கூடாது No Speculative Purpose) என்பதாகும்.

7.

கடன் வழங்கும் நடைமுறை

1) கடன் பெறுபவர் கடன் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டவாறு அனைத்து தகவல்களையும் கொடுக்க வேண்டும்.
2) கடன் பெறுபவர் நகைகளை மேலாளரிடம் கொடுக்க வேண்டும்.
3) விண்ணப்பத்தில் உள்ளவாறு நகைகள் சரியாக உள்ளனவா என்பதை மேலாளர் சரிபார்க்க வேண்டும்.
4) கட்ன பெறுபவர் முன்னிலையில் நகைகளின் எடையும் தரமும் ( Weight & touch) பார்க்கப்பட வேண்டும்.
5) வங்கியின் நகை மதிப்பீட்டாளரால் நகைகள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
6) வங்கியின் மேலாளரும் நகை மதிப்பீடு செய்வது பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
7) நகையின் மதிப்பு நகைகளின் எடை மற்றும் தரத்தின் அடிப்படையில் முடிவு செய்யப்பட வேண்டும்.
8) நிகர எடையை ( (Net weight) தங்கம் இல்லாத கற்கள் போன்றவற்றை நீக்கி முடிவு செய்ய வேண்டும்.
9) நகைகள் 22 காரட் உள்ளது என்பதையும் அதைவிட குறைவானதில்லை என்பதையிம் நகை மதிப்பீட்டாளர் உறுதி செய்ய வேண்டும்.
10) நகைகள் பித்தளை அல்லது வேறு உலோகங்களில் அல்லது தங்கமுலாம் பூசப்பட்டவி அல்ல என்பதை உறுதி செய்ய வேண்டும்.

8.

கடன் தொகையை மதிப்பிடுதல்

1) பதிவாளர் அவ்வப்போது வழங்கும் அறிவுரைகளுக்கு உட்பட்டு கடன் தொகை கணக்கிடப்பட வேண்டும்.
2 உச்ச அளவு கடன் தொகை நகையின் எடைக்கான உச்ச அளவு கடன் தொகை மற்றூம் ஒரு நபருக்கு உச்ச அளவு என பதிவாளரால் நிர்ணயிக்கப்பட்ட கடன் தொகை ஆகிய இரண்டில் எது குறைவாக உள்ளதோ அதுவே உச்ச அளவு கடனாக நிர்ணயிக்கப்பட வேண்டும். சந்தை மதிப்பில் கிராமுக்கு 75% அல்லது அவ்வப்போது நிர்ணயிக்கப்படும் அளவு 10 லகிராமுக்கு ஒரு கிராம் 500 மிலி கழிவாக எடுக்கப்படும்(1.500)
3) கடன் தொகை ரூபாய் நூறின் மடங்குகளாக வழங்கலாம். (Multiple of Rs.100)
4) ஏற்கனவே வங்கியில் ஈடாக வைக்கப்பட்ட அதே நகைக்கு இரண்டாவது கடன்( second loan) வழங்கக்கூடாது.

9.

கடனின் காலம்

நகைக்கடன் ஓராண்டு காலத்திற்குள் திரும்ப செலுத்தப்படவேண்டும்.

10.

வட்டி விழுக்காடு

நகைக்கடனுகான வட்டி ரூ1,00,000/- வரை வட்டி விகிதம் ஆண்டுக்கு 9.50%
ரூ2,00,000/- வரை வட்டி விகிதம் ஆண்டுக்கு 9.75%
ரூ2,00,000/- க்கு மேலான கடன் களுக்கு வட்டி விகிதம் ஆண்டுக்கு 10%

தவணை தவறிய வட்டி 3%
வட்டி விகிதம் அவ்வப்போது வழங்கப்படும் அறிவுரைகளூக்கு உட்பட்டது.

11.

தவணைக்கு முன்பு கடனைச் செலுத்துதல்

1) ஓராண்டு தவணைக்கு முன்பு கடனை திரும்ப செலுத்தினால் கடன் வழங்கிய நாளிலிருந்து கடனை செலுத்திய நாள் வரை வட்டி கணக்கிட்டு வசூல் செய்யப்பட வேண்டும்.
2) கடன் வழங்கிய நாளிலிருந்து 15 நாட்களூக்கான வட்டி வசூலிக்கப்பட வேண்டும்.

12.

கடன் வழங்குதல்

1) கடன் அனுமதிக்கப்பட்டதும் பற்று சீட்டில் கடன் பெறுபவரிடம் கையொப்பம் பெற்று பணம் வழங்கப்பட வேண்டும்.
2) தங்க நகை பற்றிய விவரங்கள் குறிப்பிட்ட கடன் பேரேட்டில் கடன் பெறுபவரிடம் கையொப்பம் பெற வேண்டும். இதனால் ஈடுவைக்கப்பட்ட நகைகளை உறுதி செய்யவும் இயலும்.

13.

கட்டணங்கள்

1) இணை உறுப்பினர் கட்டணம்
2) நகை மதிப்பீட்டாளர் கட்டணம்
3) இதர கட்டணங்கள் ஏதாவது இருப்பின் வசூலிக்கப்பட வேண்டும்

14.

நகை கடன் அட்டை

கடன் தொகை வழங்கிய பின்னர் கீழ்க்கண்ட தகவல்கள் அடங்கிய இரண்டு நகைக்கடன் அட்டைகள் தயாரிக்கப்பட வேண்டும்.

1) கடன் பெற்றவர் பெயர்
2) கடன் எண்
3) கடன் தொகை
4) கடன் வழங்கிய நாள்
5) நகைகள் ஈடாக வைக்கப்பட்ட நாள்
அசல் அட்டை கடன் பெற்றவரிடம் ஒப்புதல் பெற்று கொடுக்க வேண்டும்

15.

காப்பீடு

1) கடன் வழங்கிய பின்னர் நகைகளின் மொத்த மதிப்புக்கு (Total Gross Value) அனைத்து இடர்களையும் உள்ளடக்கி ( All Risks) முழுமையாக காப்பீடு செய்யப்பட வேண்டும். இதில் நெருப்பு கொள்ளை போதல் ஆகியவையும் (Fire and Burglary) சேர்க்கப்பட வேண்டும்.
2) காப்பீடு செய்யப்பட்ட ஆவணம் வங்கியின் பாதுகாப்பில் (safe custody) வைக்கப்பட வேண்டும்.

16.

நகைகளை பாதுகாப்பாக வைத்தல்

1) கடன் பெற்றவரின் பெயர் கடன் எண் நகைகளின எண்ணிக்கை மற்றூம் எடை ஆகிய தகவல்களுடன் இரண்டு அட்டைகள் தயாரிக்கப்பட வேண்டும்.இவற்றில் மேலாளர் காசாளர் மற்றும் நக மதிப்பீட்டாளர் கையொப்பமிட வேண்டும்.
2) நகைகள் பார்த்ததும் வெளியே தெரிகின்ற பையில்(polythene Bag) வைக்க வேண்டும்.( அந்த பை இறுக்கமாக மேல்பகுதியில் கட்டப்பட வேண்டும். இதில் நகை மதிப்பீட்டாளரின் முத்திரை பதிக்கப்பட வேண்டும்.
3) கட்டப்பட்ட இப்பை துணிப்பையில் வைக்கப்பட வேண்டும். இது கட்டப்பட்டு இதில் ஒரு அட்டை தொங்கவிடப்பட வேண்டும். பின்னர் மேலாளர் காசாளர் மற்றூம் நகை மதிப்பிட்டாளர் ஆகியொர் முன்னிலையில் வங்கியின் முத்திரை வைக்கப்பட வேண்டும்.
4) நகைப் பைகளை இலகுவாக எடுப்பதற்கு ஏதுவாக வழங்கப்பட்ட எண்கள் அடிப்படையில் அவற்றை வரிசையாக (In serial order of loan numbers) வைக்க வேண்டும்.
5) வங்கியின் பணம் வைக்கப்படுகின்ற அதே பாதுகாப்பு பெட்டியில் நகைப்பைகளை வைக்கக்கூடாது.
6) நகைப்பைகள் பாதுகாப்பு பெட்டியில் வைப்பது மற்றூம் எடுப்பது மேலாளர் மற்றும் காசாளர் ஆகிய இருவராலும் இணைந்தே செய்யப்பட வேண்டும்.
7) நகைப்பைகளை பாதுகாப்பு பெட்டியிலிருந்து எடுக்கும்போதும் மீண்டும் வைக்கும் போதும் மேலாளரும் காசாளரும் இணைந்தே செய்ய வேண்டும்.
8) நகை இருப்பு பதிவேடு பேணப்பட வேண்டும். நகைப் பைகளை எடுக்கும் போதும் பாதுகாப்பு பெட்டியில் வைக்கும் போதும் இருப்பு பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும். இதன் மூலம் நகைப்பைகளின் எண்ணிக்கை எப்போதும் சரியாக இருக்க வேண்டும்.

17.

கடனில் ஒரு பகுதியை செலுத்துதல் ( Redemptio)

நகையை திரும்ப கொடுக்கும் போது நகைக்கடன் அட்டையில் உரிய இடத்தில் கையொப்பம் பெற்று அட்டையை வாங்கிக்கொள்ள வேண்டும்.
2) அசல் வட்டி மற்றும் இதர இனங்கள் ஏதாவது இருந்தால் அவற்றையும் முழுமையாக கடன் பெற்றவரிடம் வசூல் செய்ய வேண்டும்.
3) கடன் அட்டை கொண்டு வரப்படாவிட்டாலும் கடனை முடிவு கட்டி நகைகளை திரும்ப கொடுக்கலாம். இருப்பினும் கடன் பெற்றவர் சரியான நபர்தான் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
4) அவரிடம் நகைக்கடன் அட்டை தொலைந்து விட்டது என்பதற்கும் அட்டை கிடைத்தால் வங்கியில் ஒப்படைத்துவிடுவேன் என்பதற்கும் உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்க வேண்டும்.
5) நகைக்கடன் பெற்றவர் நகைக்கடன் அட்டையை கொண்டு வரவில்லை என்பதை குடன் பேரேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
6) கடனை செலுத்தியதும் நகைகளை பாதுகாப்பாக பெட்டியிலிருந்த் வெளியே எடுத்து பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும். பதிவு மேலாளர் மற்றும் காசாளரால் கையொப்பம் இடப்பட வேண்டும். காரணம் அவர்கள் இணை பொறுப்பாளர்கள்.
7) கடனை செலுத்தியவர் நகைகளை உறுதிசெய்த பின்னர் பையின் கட்டை அவிழ்த்து நகைகளை எடுத்து கொடுக்க வேண்டும். நகை கடன் அட்டையிலும் நகை கடன் பேரேட்டிலும் கடன் பெற்றவரிடம் கையொப்பம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
8) நகைகளின் ஒரு பகுதியை மட்டும் திரும்ப கொடுப்பதற்கு அனுமதிக்கக்கூடாது. முழு நகைகளையும் ஓரே நேரத்தில் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
9) கேட்பு உறுதிமொழி பத்திரத்தை ( Demand Promissory Note) கேட்பை நீக்கி கடனை செலுத்தியவரிடம் திரும்ப கொடுத்துவிடவேண்டும்.

18.

மூன்றாவது நபரிடம் நகைகளைக் கொடுத்தல்

கடன் பெற்றவர் மூன்றாவது நபர் மூலம் நகைகளை திரும்ப பெற்றுக்கொள்வதாக இருந்தால் கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
1) கடன் பெற்றவர் மேலாளருக்கு முகவரியிட்டு அவரால் அனுமதிக்கப்பட்ட அல்லது அதிகாரம் வழங்கப்பட்ட நபரின் பெயரைக் குறிப்பிட்டு அவர் தனது சார்பாக பணம் செலுத்தி நகைகளை பெற்றுக்கொள்வார் என்பதை குறிப்பிட்டு கடிதம் கொடுக்க வேண்டும்.
2) கடனை செலுத்தி நகைகளை பெற்றுக்கொள்வரது கையொப்பத்தை கடன் பெற்றவர் அக்கடிதத்திலேயே சான்று செய்ய வேண்டும்.
3)அனுமதி அல்லது அதிகாரம் வழங்கப்பட்டவர் அக்கடித்தத்தையும் நகைக்கடன் அட்டையையும் மேலாளரிடம் கொடுக்க வேண்டும்.
4) ஆவணங்கள் சரிபார்த்து நகைகளை அனுமதி அல்லது அதிகாரம் பெற்றவரிடம் வழங்கவேண்டும். இத்தகைய நிலியில் வழங்கப்பட்ட அனுமதி அல்லது அதிகாரத்தை கவனமாக படித்து பரிசீலிக்க வேண்டும். அனுமதி கொடுத்தவரின் கையொபத்தை ஆவணங்களிலுள்ள கையொழுத்துடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும்.
5) கடன் பெற்றவர் இந்தியாவில் இல்லாமல் வெளிநாட்டில் இருந்தால் அவரது அனுமதி அந்நாட்டின் வெளிதூதரக அலுவலர் மூலம் ஒப்புதல் செய்யப்பட வேண்டும்.( Attested by the consulate general in the Indian embassy where the loanee resides) கடன் பெற்றவர் இந்தியா வந்ததும் அவர் கொடுத்த அனுமதி இந்தியாவில் பதிவு செய்யப்படவேண்டும். அனுமதி பெற்றவர் பற்றிய தகவல்களும் சரியாக உறுதி செய்யப்பட வேண்டும். இதற்கு பின்னரே நகைகளை வழங்க வேண்டும்.

19.

தகவல்

தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் பயிற்சி கல்லூரி மத்திய கூட்டுறவு வங்கிக் பணியாளர்களுக்கு தயாரித்து வழங்கிய பயிற்சி கையேடு 1997 கொடுக்க வேண்டிய ஆவணங்கள்

1. ஆதார் அட்டை
2. புகைப்படம்
3. முகவரிச் சான்று
4) தனிநபர் அடையாளச்சான்று