1. | கடன் திட்டத்தின் பெயர் |
கூட்டுப் பொறுப்புக்குழு - முதலீட்டுக் கடன் |
---|---|---|
2. | நோக்கம் |
1) சிறு குறு விவசாயிகளின் வருமான அளவை உயர்த்துதல் |
3. | கடன் பெற தகுதியானவர்கள் |
1) சிறு குறு மற்றும் குத்தகை விவசாயிகள் |
4. | கடன் வழங்கும் நிறுவனம் |
இக்கடன் கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலமாக |
5. | கடன் வழங்க தகுதியான நோக்கங்கள் |
குழு அல்லது உறுப்பினர்களுக்கு விவசாயம் அல்லது விவசாயம் தொடர்பான கூட்டுப்பொறுப்பு அல்லது தனி பொறுப்பில் கீழ்க்கண்ட நோக்கங்களுக்கு கடன் வழ்ங்கலாம். |
6. | மத்தியக் கால கடன் |
இத்தொழில் மூலம் தொடர்ந்து வருமானம் வருவதால் இத்தகைய கடன் கள் மத்திய காலக் கடன் கள் ஆகும். |
7. | கடன் தொகை |
1) உச்ச அளவு கடன் தொகை ரூ5.00 லட்சம் |
8. | வட்டி விழுக்காடு |
தற்போது நடைமுறையிலிருக்கும் வட்டி 12% வட்டி ஆறு மாதத்திற்கு ஒருமுறை வசூலிக்கப்படும். இந்த வட்டி விகிதம் பதிவாளரின் அறிவுரைக்கு ஏற்ப மாறுதலுக்கு உட்பட்டதாகும். |
9. | விளிம்புத் தொகை |
வ்ங்கி வழங்கும் கடனில் 5% விளிம்புத்தொகையாக குழு உறுப்பினர் செலுத்த வேண்டும். |
10. | அசையும் / அசையா சொத்துக்கள் உருவாக்குதல் |
1) கடன் தொகை மூலம் உருவாக்கப்படும் சொத்தின் மதிப்பு தரம் போன்றவை குழுவினரால் சான்று செய்யப்பட்டு முழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். |
11. | காப்பீடு |
1) சொத்துக்கள் உருவாக்கப்பட்டது அல்லது நடவடிக்கைகளுக்கு ஏற்ப மத்தியக் கூட்டுறவு வங்கியால் தேர்வு செய்யப்பட்ட நிறுவனம் மூலம் காப்பீடு செய்ய வேண்டும். |
12. | காப்பீடு ( Insurance) |
1) இரு சக்கரவாகனமெனில் கடன் பெறுபவர் மற்றும் வங்கி கூட்டுப் பெயரில் காப்பீடு செய்ய வேண்டும். ஒவ் வொரு ஆண்டும் கடன் தாரர் செலவில் காப்பீடு புதுப்பிக்கப்படுவதை மேலாளர் உறுதி செய்ய வேண்டும். |
13. | பாதுகாப்பான கிடங்குகள் |
1) உற்பத்தி அல்லது விளைப்பொருட்களை பாதுகாக்க தகுதியான கிட்டங்கி அல்லது கிடங்குகள் இருப்பதை சங்கம் உறுதி செய்ய வேண்டும். |
14. | பிணையம் |
1) கடனை திரும்ப செலுத்த அனைத்து உறுப்பினர்களும் கூட்டாகவும் தனித்தனியாகவும் பொறுப்பேற்க வேண்டும். |
15. | ஆவணங்கள் |
1) அனைத்து உறுப்பினர்களும் கையோப்பமிட்ட ஒப்பந்தப்பத்திரம். |
16. | கடன் பட்டுவாடா செய்தல் |
1) திட்டத்தின் தன்மைக்கேற்ப கடன் தொகை ஒரே தவணையாகவோ அல்லது சில தவணைகளாகவோ அல்லது திட்ட நடவடிக்கைகளுக்கு ஏற்ப படிபடியாக சில நிலைகளிலோ பட்டுவாடா செய்யப்படும், |
17. | கடனை திரும்ப செலுத்தும் காலம் |
1) திட்ட நடவடிக்கைகளின் தன்மைக்கேற்ப கடனை திரும்ப செலுத்தும் காலம் 36 மாதங்கள் முதல் 60 மாதங்கள் வரை அனுமதிக்கப்படும். |
18. | கடன் தவணை தவறுதல் |
1) பெற்ற கடனை திரும்ப செலுத்துவது உறுப்பினர்களின் கூட்டுப்பொறுப்பாகும். |
19. | ஆய்வு |
கடன் மூலம் உருவாக்கப்படும் சொத்துக்கள் மற்றும் அதன் பயன்பாடுகளை கட்ன் வழங்குக் சங்க அலுவலர்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலர்கள் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்யலாம், |
20. | விதிகள் மாற்றம் அல்லது திருத்தம் |
இந்த மத்தியகால் முதலீட்டுக்கடன் திட்டம் சிறந்த முறையில் பயன்பட வேண்டும் என்பதால் அவ்வப்போது இந்திய தலைமை வங்கி அல்லது தேசிய வங்கி மற்றும் அரசு வழங்கும் அறிவுறைகளுக்கு ஏற்ப கடன் சங்கங்களின் விதிகளில் மாற்றம் அல்லது திருத்தம் செய்து கொள்ளலாம். |