logo


1 / 3
2 / 3
3 / 3




    கறவை மாடுகள் வாங்குதல்



1.

கடன் திட்டத்தின் பெயர்

கறவை மாடுகள் வாங்குதல்

2.

நோக்கங்கள்

கறவை மாடுகள் வாங்குதல்

3.

தகுதியானவர்கள்

1) சிறு விவசாயிகள்
2) மிகச்சிறு விவசாயிகள்
3) பால் மாடு பராமரிப்பில் அனுபவம் உள்ளவர்கள்
4) சொந்தமாக வீடு உள்ளவர்

4.

கடன் அளவு / மாடுகள் எண்ணிக்கை

இரண்டு கலப்பின பசு மாடுகளுக்கு ரூ51,000/-

5.

கறவை அளவு

1) ஒரு பசுமாடு நாள் ஒன்றுக்கு குறைந்த அளவாக 6 லிட்டர் கறக்க வேண்டும்
2) இரண்டு மாடுகளாக இருந்தால் குறைந்த அளவாக 12 லிட்டர் கறக்க வேண்டும்

6.

மாட்டு தீவனம் மற்றும் காப்பீடு

கடன் அளவில் ரூ1000/-(ஆயிரம்) ஒரு மாத மாட்டுத்தீவனத்திற்காகவும், காப்பீடு செய்வதற்கும் அனுமதிக்கப்படுகிறது, கடன் தொகை செலுத்தப்படும் வரை காப்பீடு ஓவ் வொரு ஆண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும்.

7.

மாட்டு தொழுவம்

தேவையான அளவுக்கு மாட்டு தொழுவம் அமைக இடம் இருக்க வேண்டும்.

8.

பிணையம்

1) ஒரு மாடு வாங்கினால் வருவாய் உள்ள ஒரு நபர் பிணையம் கொடுக்க வேண்டும்.
2) இரண்டு மாடுகள் வாங்கினால் சொத்து அடமானம் கொடுக்க வேண்டும்.

9.

கடனின் காலம்

5 ஆண்டுகள்

10.

முதல் தவணை செலுத்தும் காலம்

1) மாடுகள் வாங்கி, 3 மாதங்களுக்குப் பின்னர் முதல் தவணை செலுத்த வேண்டும்
2) தவணைத் தொகை வட்டியுடன் செலுத்த வேண்டும்.

11.

உறுப்பினர்

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் உறுப்பினராகி விண்ணப்பம் சங்கத்தின் மூலமாக வங்கிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

12.

பால் உற்பத்தி சங்கத்தின் உறுதிமொழி

பால் கறவைக்கு வழங்க வேண்டிய பணத்திலிருந்து உறுப்பினரிடம் பிடித்தம் செய்து தொடக்கச் சங்கத்திற்கு செலுத்த பால் உற்பத்திச் சங்கம் உறுதிமொழி கொடுக்க வேண்டும்.

13.

வட்டி

வட்டி 12 %
தவணை தவறிய வட்டி 2%

14.

கலப்பின எருமை மாடுகள்

மேலே கூறப்பட்ட அதே நிபந்தனைகளின்படி இரண்டு கலப்பின எருமை மாடுகளுக்கு கடன் வழங்கலாம்.
தவணை தவறிய வட்டி 2%