logo


1 / 3
2 / 3
3 / 3




    திருமண மண்டபம் / வணிக வளாகம் கட்டுதல் கடன்



1.

கடன் திட்டத்தின் பெயர்

திருமண மண்டபம் / வணிக வளாகம் கட்டுதல் கடன்

2.

நோக்கங்கள்

1) திருமண மண்டபம் மற்றும் அதற்கான தளவாடச் சாமான் கள் வாங்குதல்
2) வணிக வளாகம் கட்டுதல்

3.

இணை உறுப்பினர்

கடன் பெறுபவரும் பிணையதாரரும் ரூ100/- செலுத்தி இணை உறுப்பினராக வேண்டும்

4.

கடன் தொகை

பொறியாளர் மதிப்பீட்டில் 75% அல்லது ரூ25/- லட்சம் இதில் எது குறைவோ அத்தொகை

5.

தவணைக்காலம்

அசலும் வட்டியும் சேர்த்து 120 மாத சம தவணைகள்

6.

வட்டி

சாதாரண வட்டி 12%
தவணை தவறிய வட்டி 3%
வட்டி விகிதம் அவ்வப்போது வழங்கும் அறிவுரைகளுக்கு உட்பட்டது

7.

கட்டணங்கள்

1) வங்கிக்கு பரிசீலனை கட்டணம் 1% இத்தொகை குறைந்தது ரூ500/- (ஐந்நூறூ) உச்ச அளவு ரூ1,500/- ( ஆயிரத்து ஐநூறு)
2) சட்ட ஆலோசகர் கட்டணம் 1% அல்லது அதிக அளவாக ரூ2,500/- ( இரண்டாயிரத்து ஐநூறு)

8.

காப்பீடு

கட்டடம் மத்திய வங்கி மற்றும் மனுதாரர் கூட்டுப் பெயரில் காப்பீடு செய்யப்பட வேண்டும்.

9.

கடன் பட்டுவாடா முறை

1) கடன் தாரர் தனது பங்கை பயன்படுத்திய பின்னர் பயன்பாட்டை பார்வையிட்டு முதல் தவணை பட்டுவாடா செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்ட கடன் தொகை 40%, 30% மற்றும் 30% என்ன விழுக்காட்டில் வழங்கப்படும்.
2) தளவாடங்களுக்கான கடன் தொகை விலைப்பட்டியல் கொடுத்த நிறுவனங்கத்திற்கு நேரடியாக வழங்கவேண்டும்.
3) பொறியாளர் அல்லது வங்கி அலுவலர் பார்வையிட்ட பின்னர் அடுத்த தவணை பட்டுவாடா அனுமதிக்க வேண்டும்.

10.

கொடுக்க வேண்டிய ஆவணங்கள்

1) அடமானம் கொடுக்கும் சொத்தின் மூலப்பத்திரம் மற்றும் உரிமைப் பத்திரம்.
2) 30 வருட வில்லங்கச்சான்று
3) ஒப்புதல் பெற்ற கட்டட வரைபடம்
4) பதிவு பெற்ற பொறியாளரின் கட்டட மதிப்பீடு அறிக்கை
5) நடப்பு ஆண்டு நிலவரி செலுத்திய சீட்டு
6) குடும்ப அட்டை நகல்
7) தனிநபர் அடையாள அட்டை ( individual identification Card)
8) கடன் பெறுபவர் மற்றும் பிணையதாரர் புகைப்படங்கள் பட்டைய கணக்காளர் மூலமாக வருமான வரி தாக்கல் செய்யப்பட்ட மூன்று ஆண்டு கணக்கு விபரங்கள்

11.

பிணையம்

கடன் தொகைக்கு சமமான இரண்டு மடங்கு சொத்து வங்கியின் பெயருக்கு அடமானம் கொடுக்க வேண்டும். மண்டபம் அல்லது வணிக வளாகம் வங்கிக்கு அடமானம் கொடுக்க வேண்டும்.

12.

கடன் அளவை உயர்த்துதல்

கடன் அளவு நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக தேவைப்பட்டால், மாநில கூட்டுறவு வங்கி / தேசிய வங்கியின் அனுமதி பெற்று வழங்கலாம்.