logo


1 / 3
2 / 3
3 / 3




    பேரூராட்சி மற்றும் நகராட்சி எல்லையில் தொழில் / சிறு வணிகக் கடன்



1.

கடன் திட்டத்தின் பெயர்

பேரூராட்சி மற்றும் நகராட்சி எல்லையில் தொழில் / சிறு வணிகக் கடன்

2.

தகுதிகள்

1) கடன் கோருபவர் மற்றும் பிணையதாரர் இருவருக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும்
2) கடனை திரும்ப செலுத்தும் அளவுக்கு நிரந்தர வருமானம் ஈட்டுபவராக இருக்கவேண்டும்.
3) பிணையதாரர் அரசு ஊழியராகவோ அல்லது புகழ் பெற்ற நிறுவனத்தில் பணிபுரியும் நிரந்தர ஊதியம் பெறுபவராகவோ இருக்கலாம்.
4) வங்கி கிளையில் ஏற்கனவே அசையா சொத்தை ஈடாக வைத்து கடன் பெற்றவராக இருக்கலாம்.
5) ஏற்கனவே கிளையில் கடன் பெற்று முறையாக திரும்ப செலுத்திய வாடிக்கையாளராக இருக்கலாம்.
6) நிரந்தர வருமானம் உள்ளவர் பிணையதாரராக இருக்க வேண்டும்.
7) கடன் கோருபவர், ஏற்கனவே வியாபாரம் செய்து கொண்டிருப்பவராக இருக்க வேண்டும்.

3.

தொழில் ஆதாரம்

1) சிறு வணிகம் செய்வதற்கு ஆதாரமாக ஆர்.சி. சான்று அல்லது நகராட்சி / பேரூராட்சியில் பெற்ற உரிமம், அல்லது தொழில் வரி செலுத்திய ரசீது, கடன் மனுவுடன் இனைக்கவேண்டும்

4.

வாடகை இடம்

வணிகம் அல்லது தொழில் செய்யும் இடம் வாடகை இடமாக இருந்தால் கடன் முடியும் வரை வாடகை ஒப்பந்தம் உள்ளது என்பதற்கு வாடகை ஒப்பந்த நகல் கொடுக்க வேண்டும்.

5.

நிபந்தனைகள்

1) ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும்.
2) ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் பிணையதாராராகவும் இருக்கக்கூடாது.
3) இரண்டு நபர்கள் ஒருவருக்கொருவர் பிணையதாராக இருந்து இருவருக்கும் கடன் வழங்கப்படமாட்டாது.
4) வியாபாரம் அல்லது தொழில் செய்ய உரிமம் பெற்றவர் மற்றும் தொழில் செய்து தொழில் வரி செலுத்துபவர் மட்டுமே கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
5) வங்கியில் ஏற்கனவே அடமானக் கடன் பெற்று கடன் நிலுவை இருந்தால் அவருக்கு வணிகக் கடன் அனுமதிக்கக் கூடாது.

6.

குடும்ப உறுப்பினர்

1) திருமண ஆகாத நபர்களுக்கு கடன் வழங்கும் போது மனுதாரரின் தந்தையையும் கூட்டு மனுதாரராக சேர்க்க வேண்டும்.
2) கடன் கோருபவரின் தந்தை அல்லது மனைவி பெயரில் சொந்த வீடு இருந்தால் வீடு யார் பெயரில் உள்ளதோ அவரையும் சேர்த்து கடன் மனு கோர வேண்டும்.

7.

கடன் அளவு

1_ கடன் அளவு ஒரு நபர் பிணையத்தில் ரூ 25,000/-
2) இரு நபர் பிணையத்தில் ரூ50,000/- ( முதல் முறை கடனைப் பெற்றூ முறையாக திரும்ப செலுத்தியவர்களுக்கு மட்டும்)

8.

கடன் பட்டுவாடா

கடன் அனுமதிக்கப்பட்ட பின்னர் வங்கியில் சேமிப்புக் கணக்கு திறந்து கடன் தொகையை அதில் வரவு வைப்பதன் மூலம் கடன் பட்டுவாடா செய்யப்படும்.

9.

G S T

1) ரூ25,000/- வரை ரூ100/-
ரூ25,000/- த்துக்கு மேல் ரூ 50,000/- வரை ரூ200/-
2) இவற்றுடன் GST வரியும் வசூலிக்க வேண்டும் (1/2%)

10.

கிளைமேலாளர்

1) கிளைமேலாளர் கடன் கோருபவர் கடனை திரும்ப செலுத்தும் சக்தி உள்ளவரா என்பதை பரிசீலனை செய்து கடனை அனுமதிக்கவேண்டும்.
2) மேலாளருடன் உதவி மேலாளரும் இனைந்து கையொப்பமிட்டு கடன் மனுவை பரிந்துரை செய்ய வேண்ட்ம். உதவி மேலாளர் இல்லாத நிலையில் காசாளர் இணைந்து கையொப்பமிட்டு கடன் மனுவை பரிசீலித்து பட்டுவாடா செய்ய வேண்டும்

11.

தவணைக்காலம்

24 மாதங்கள்

12.

பிணையம்

கீழ்க்கண்டவர்கள் பிணையதாரர்களாக இருக்கலாம்.

1) அரசு அல்லது புகழ்பெற்ற நிறூவனத்தில் பணியாற்றூம் மாத ஊதியம் பெறுபவர்.
2) கிளைகளிம் ஏற்கனவே அசையா சொத்தை அடமானம் வைத்து கடன் பெற்று கடனை முறையாக செலுத்தி வரும் வாடிக்கையாளர்.
3) அடமானம் இல்லாமல் வங்கியில் கடன் பெற்றூ முறையாக திரும்ப செலுத்திவரும் வாடிக்கையாளர்
4) நிலையான நிரந்தர வருமானம் உள்ளவர்.

13.

கடன் அளவை உயர்த்துதல்

1) முதல் முறை கடன் பெற்று முறையாக திரும்ப செலுத்திய பின்னர், இரண்டாவது முறை கடன் கேட்டால், ரூ 25,000/- லிருந்து ரூ 35,000/- வரை உயர்த்தி வழங்க பரிந்துரைக்கலாம்.
2) இக்கடனையும் திரும்பி செலுத்திய பின்னர் மீண்டும் கடனை தகுதியின் அடிப்படையில் ரூ50,000/- ஆக உயர்த்தி வழங்க பரிந்துரை செய்யலாம்.

14.

வட்டி

1) மாதம் சராசரியாக ( EMI) செலுத்த வேண்டும் வட்டி 12% விழுக்காடு
2) தவணை தவறிய வட்டி 1.50 விழுக்காடு

15.

கடன் மனுவுடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்

1) குடும்ப அட்டை நகல் / இருப்பிட சான்று
2) கடன் தாரரும் பிணையதாரரும் பணியில் ஊதியச் சான்று இவர்கள் மூன்று ஆண்டு காலம் பணியில் இருப்பவர்களாக இருக்க வேண்டும். வேறு இடத்திற்கு மாறுதல் செய்யப்படாதவர்களாகவும் இருக்க வேண்டும்.
3) கடன் கோருபவர் மற்றும் பிணையதாரரின் சமீப புகைப்படங்கள்
4) தொழில் செய்வதற்கான ஆர்.சி. அல்லது உள்ளாட்சித் துறையில் பெற்ற உரிமம். அல்லது நடப்பு ஆண்டுக்கான தொழில்வரி செலுத்திய ரசீது.
5) தொழில் செய்யும் இடம், வாடகை கட்டடமெனில் வாடகை ஒப்பந்தம் நகல் ரூ25,000/ க்கு மேற்பட்ட கடனுக்கு மட்டும்)
6) கடன் தாரர் அல்லது பிணையதாரர் சொந்தமாக வீடு உள்ளது என்பதற்கு இறுதியாக செலுத்திய வீட்டுவரி ரசீது.
7) வணிகம் / தொழில் செய்யும் கடையின் புகைப்படம்.