logo


1 / 3
2 / 3
3 / 3




    ஓய்வூதியர் மருத்துவச் செலவுக்கு கடன்



1.

கடன் திட்டத்தின் பெயர்

ஓய்வூதியர் மருத்துவச் செலவுக்கு கடன்

2.

நோக்கம்

ஓய்வூதியம் பெறுகின்றவர்களின் அவசர மருத்துவச் செலவுக்கு கடன் வழங்குவது

3.

கடன் அளவு

1) உச்ச அளவு 10 (பத்து) மாத ஓய்வூதியம் அல்லது ரூ50,000/- (ஐம்பதாயிரம்) இதில் எது குறைவோ அத்தொகை கடனாக வழங்கப்படும்.
2) கடன் விண்ணப்பத்துடன் அவசர சிகிச்சை தொடர்பான விவரங்கள் அடங்கிய மருத்துவச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்

4.

வட்டி

1) இக்கடனுக்கான வட்டி - 12%
2) மாத நிலுவைக்கு வட்டி கணக்கிட்டு மாதாமாதம் அசலுடன் வட்டியும் சேர்த்து செலுத்த வேண்டும்.
3) இக்கடனை தவணை நாளுக்குப்பின்னர் செலுத்தப்பட்டால் கடனுக்கு கூடுதலாக 1.5% வட்டி செலுத்த வேண்டும்.

5.

கடன் காலம்

கடன் காலம் 24 மாத சம தவணைகள்

6.

ஓய்வூதிய கணக்கு

வங்கியில் கணக்கு வைத்திருபவராக இருக்க வேண்டும்.

ஓய்வூதியம் பெறுகின்றவர் வங்கியில் கணக்கு திறந்து அதன் மூலம் ஓய்வூதியம் பெற வேண்டும். இவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கடன் அனுமதிக்கப்படும்.

7.

கடனை திரும்ப செலுத்துதல்

1) ஒவ் வொரு மாத தவணையையும் ஓய்வூதிய கணக்கிலிருந்து ஈடுசெய்ய சம்மதம் தெரிவித்து உறுதிமொழி கடிதம் கொடுக்க வேண்டும்.
2) பாஸ்புத்தகம் வங்கியில் ஒப்படைக்கப்பட வேண்டும்.
3) வங்கியில் ஓய்வூதியம் வரவு வைக்கப்படும் பாஸ் புத்தகம் கடன் திரும்ப செலுத்தப்படும் வரை வங்கியில் ஈடாக சமர்ப்பிக்கவேண்டும்.

8.

சட்டபூர்வ வாரிசுகளின் உறுதிமொழி

கடன் பெற்ற ஓய்வூதியர் இறந்துவிட்டாலோ அல்லது கானாமல் போய்விட்டாலோ அல்லது அவரது இருப்பிடம் தெரியாமல் இருந்தாலோ ஓய்வூதிய வங்கி கணக்கிலிருந்து கடன் தொகையை வட்டியுடன் ஈடுசெய்து கொள்ளவும் மேற்படி கடனில் நிலுவையுள்ள தொகையை வட்டியுடன் ஒரே தவணையில் திரும்பி செலுத்தவும் அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் உறுதிமொழிக்கடிதம் கொடுக்க வேண்டும்.

9.

கடன் அனுமதி

1) கிளைகளில் கிளை மேலாளர் அனுமதிக்கலாம்.
2) வழங்கப்படும் கடன் தொகைக்கு புரோ நோட்டு எழுதி வாங்கவேண்டும்.
3) இதற்கு தனியாக கடன் பதிவேடு / கிளைகளில் பேணப்பட வேண்டும்.