logo


1 / 3
2 / 3
3 / 3




    சிறு பால்பண்ணை அமைத்தல்



1.

கடன் திட்டத்தின் பெயர்

சிறு பால்பண்ணை அமைத்தல்

2.

நோக்கங்கள்

சிறு பால்பண்ணை அமைக்க கடன் வழங்குதல்

3.

மாடுகள் எண்ணிக்கை

1) கலப்பின மாடுகள் 3+2=5
2) முதல் 3 மாடுகளுக்கு கடன் வழங்கி ஆறு மாதங்களுக்குப்பின்னர் 2 மாடுகள் வாங்க அனுமதி வழங்கப்படும்.

4.

கடன் அளவு

1) கடன் அளவு ரூ1,01,750/- அனுமதிக்கலாம்.
2) முதல் தவணையாக 3 மாடுகளுக்கான கடன் தொகை வழங்கப்படும்.
3) 2 மாடுகளுக்கு 6 மாதங்களுக்குப் பின்னர் கடன் தொகை அனுமதிக்கப்படும். ( ஆண்டு முழுவதும் கறவை இருக்க வேண்டுமென்பதற்காக இரண்டாவது தவணை 6 மாதங்களுக்குப் பின்னர் அனுமதிக்கப்படுகிறது)
4) தொழுவம் அமைக்கவும் காப்பீட்டுக்கும் ஏற்படும் செலவு கடன் தொகையில் சேர்க்கப்பட்டுள்ளது,

5.

தகுதி

1) சொந்தமாக தண்ணீர் வசதியிடன் நிலம் உடையவர்கள்
2) மாட்டுக் கொட்டகை அமைக்க இடம் இருக்க வேண்டும்.
3) அரை ஏக்கர் நிலத்தில் மாட்டுத் தீவனப்புல் உற்பத்தி செய்ய இடவசதி இருக்க வேண்டும். மருத்துவ வசதியும் இருக்க வேண்டும்.

6.

கடன் காலம்

கடன் காலம் 5 ஆண்டுகள்

7.

முதல் தவணை

முதல் தவணை செலுத்துவதற்கான இடைவெளீக்காலம் 3 மாதங்கள்

8.

உறுப்பினர்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.

9.

பிணையம்

கடன் தொகையை போன்று ஒரு மடங்கு சொத்து அடமானம் கொடுக்க வேண்டும்.

10.

பால் விற்பனை ஏற்பாடு

1 அருகிலுள்ள பால் உற்பத்தியாளர் சங்கத்தில் பாலை எடுத்துக் கொள்வதற்கும் விற்பனைத் தொகையில் கடன் தவணையைப் பிடித்தம் செய்து வங்கிக்கு செலுத்தவும் உறுதிமொழி கடிதம் கொடுக்க வேண்டும்.
2) தனியாக பால் விற்பனை செய்வதாக இருந்தால் திட்ட அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

11.

உறுப்பினர்

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் உறுப்பினராகி விண்ணப்பம் சங்கத்தின் மூலமாக வங்கிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

12.

வட்டி

வட்டி விகிதம் 12%
தவணை தவறிய வட்டி 2%

13.

காப்பீடு

1) மாடுகள் அனைத்தும் காப்பீடு செய்யப்பட்டு வங்கிக்கு நகல் சமர்ப்பிக்கவேண்டும்.
2) கடன் தொகை முடியும் வரை ஒவ் வொரு ஆண்டும் காப்பீடு புதுப்பிக்கப்பட வேண்டும்.