logo


1 / 3
2 / 3
3 / 3





    மாத ஊதியம் பெறுவோருக்கான கடன்



1.

கடன் திட்டத்தின் பெயர்

மாத ஊதியம் பெறுவோருக்கான கடன்

2.

கடன் பெற தகுதியானவர்கள்

1) மத்திய மற்றும் அரசு பணியாளர்கள்
2) பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள்
3) அரசு நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள்.
4) இவர்களுக்கு அனைத்து பிடித்தங்களும் சேர்த்து ஊதியத்தில் 50 விழுக்காடுக்கு மேல் இருக்கக்கூடாது.

3.

ஒரே கூட்டுறவுச் சங்கத்தின் உறுப்பினர்

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம், 1983 இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள, ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினரான இருக்கக்கூடாது.

4.

உறுதி மொழிச் சான்று

1) ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராக இல்லை என்பதற்கு கடன் பெறுபவர் உறுதிமொழிச்சான்றை கடன் மனுவுடன் இணக்க வேண்டும்.
2) கடன் பெற விண்ணப்விப்பவர், தான் எந்த நிறுவனத்தில் பணியாற்றுகிறார் என்பதையும், கடன் பெறுவதற்கான ஒப்புதலையும் மற்றும் ஊதியச் சான்றையும் சமர்ப்பிக்கவேண்டும்.
3) கடன் தீரும் வரை வேறு எந்த வங்கியிலும் கடன் வாங்குவதில்லை என்ற உறுதிமொழி.

5.

சட்டப் பிரிவு 48ந் கீழ் சான்று

1) இப்பிரிவின் கீழ் ஒவ் வொரு மாதமும் கடன் பெறும் பணியாளரின் ஊதியத்தில் பிடித்தம் செய்து வங்கிக்கு செலுத்துவதாக ஊதியம் வழங்கும் அலுவலர் ( Pay Disbursing Officer) உறுதிமொழி கொடுக்க வேண்டும். கடன் பெறுபவரும் உறுதிமொழி கொடுக்க வேண்டும்.
2) சட்டப்பிரிவு 48ல் கூறப்பட்டவாறு கடன் பெற்றவர் வேறு இடத்திற்கு மாறுதல் செய்யப்பட்டாலும் அல்லது பணியிலிருந்து ஒய்வு பெற்றாலும் ஊதியம் அல்லது பணிக் கொடையிலிருந்து பிடித்தம் செய்து கொடுப்பதாக ஊதியம் வழங்கும் அலுவலர் உறுதிமொழிச்சான்று கொடுக்க வேண்டும்.
3) பணியாளரும் ஊதியம் வழங்கும் அலுவலரும் மேலே கூறப்பட்ட வாக்கியம் அட்ங்கிய ஒப்பந்த உறுதிமொழிச் சான்றை விண்ணப்பத்துடன் இனைக்கவேண்டும்.
4) கடன் தாரரும் பிணையதாரரும் இணைந்து புரோநோட்டு எழுதிக் கொடுக்க வேண்டும்.
5) ஊதியச் சான்றுடன், பிறந்த நாள், பணியில் சேர்ந்த நாள் மற்றும் ஓய்வு பெறும் நாள் ஆகிய தகவல்கள் இருக்க வேண்டும்.
6) கடன் தவணை முடிவதற்கு முன்பு பிணையதாரர் ஓய்வு பெறமாட்டார் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

6.

பிணையம்

1) கடங்கோருபவர் மற்றும் பினையதாரர் ஓரே நிறுவனத்தில் அல்லது துறையில் பணியாற்றுபவராக இருக்க வேண்டும்.
2) அதே நிறுவனத்தில் அல்லது துறையில் பணியாற்றுபவர் மட்டுமே பிணையதாரராக இருக்க வேண்டும்.

7.

செயல் எல்லை

கடன் கோருபவரும், பிணையதாரரும் வங்கியின் செயல் எல்லைக்குள் பணியாற்றுபவராக இருக்க வேண்டும்.

8.

தவணை காலம்

1) மனுதாரர் 70 வயதை நிறைவு செய்வதற்கு முன்பே, அசல் மற்றும் வட்டியை திரும்ப செலுத்தும் அளவில், தவணை நிர்ணயிக்கப்பட வேண்டும்.
2) வாங்குவதற்கு 20 வருடங்கள்
3) மனை வாங்குதல் மற்றும் விரிவுப் படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்கு 5 வருடங்கள்.

9.

இணை உறுப்பினர்

கடன் கோருபவர் மற்றும் பிணையதார் இருவரும் வங்கியில் ரூ100/- செலுத்தி இணை உறுப்பினராக வேண்டும்

10.

உச்ச அளவு கடன்

1) உச்ச அளவு கடனாக, ஒரு பணியாளருக்கு ரூ.3,00,000/ (ரூபாய் மூன்று லட்சம்) வரை வழங்கப்படும். கடன் கோருபவரின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி கூட்டுத்தொகையில் 20 மடங்குகள், அல்லது ரூ 3,00,000/- ( ரூபாய் மூன்று லட்சம்) இவற்றில் எது குறைவோ அத்தொகை உச்ச அளவு கடனாக வழங்கப்படும்.

11.

நிகர ஊதியம்

கடன் கோருபவர் பெறும் நிகர ஊதியம், இக்கடன் மற்றும் இதர பிடித்தங்கள் உட்பட 50 விழுக்காட்டுக்குக் குறையக்கூடாது.

12.

கடனின் நோக்கம்

1) கடனின் நோக்கம் கீழ்க்கண்டவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம்.
அ) குடும்ப செலவு
ஆ) கல்வி
இ) மருத்துவ செலவு

2) மருத்துவச் செலவுக்காக கடன் கோரினால் மருத்துவச் சான்றுகள் இணைக்க வேண்டும்.

13.

வட்டி

1) கடனுக்கான வட்டி விகிதம் : 12% 2) தவணை தவறிய வட்டி விகிதம் : 3%
3) வட்டி , கடன் நிலுவைக்கு நாட்கள் அடிப்படையில் கணக்கிடப்படும்.
4) வட்டி, மத்தியக் கூட்டுறவு வங்கி. மாநில கூட்டுறவு வங்கி, பதிவாளர், தேசிய வங்கி அவ்வப்போது வழங்கும் அறிவுரைக்கேற்ப மாற்றி அமைக்கலாம்.

14.

கடன் பெற தகுதி இல்லாதவர்

1) தற்காலிக பணியாளர்கள்
2) தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள்
3) வங்கியில் ஏற்கனவே ஊதியச் சான்று அடிப்படையில் கடன் பெற்று கடன் நிலுவை உள்ளவர்
4) வங்கியில் வேறு கடன் பெற்று தவணை தவறியவர்
5) கடன் கோருபவர் உறுப்பினராக உள்ள பணியாளர் கூட்டுறவுச் சங்கத்தில் கடன் நிலுவை இல்லை என சான்று வாங்க இயலாதவர்

15.

கடன் தவணை

1) பெறப்பட்ட கடன் , அசல் மற்றும் வட்டி உட்பட 60 மாத சமதவணைகளில் திரும்ப செலுத்தப்பட வேண்டும்.
2) ஒவ் வொரு மாதமும் 10ம் நாளுக்குள், ஊதியம் வழங்கும், அலுவலரால் தவணைத் தொகை பிடித்தம் செய்யப்பட்டு, ஒவ் வொரு மாதமும் அருகிலுள்ள மத்திய வங்கியின் கிளையில் காசோலை மூலம் செலுத்தப்படும் என்பதற்கு, கடன் பெறுபவரும், ஊதியம் வழங்கும் அலுவலரும் ( படிவம் 28ல்) உறுதிமொழி கொடுக்க வேண்டும்.

16.

கடன் பட்டுவாடா

கடன் கோருபவருக்கு அனுமதிக்கப்பட்ட கடன் தொகை, அருகிலுள்ள மத்திய வங்கியின் கிளையில் அவரது சேமிப்புக் கணக்கிற்கு மாறுதல் செய்வதன் மூலம் வழங்கப்படும்.

17.

தேவையான ஆவணங்கள் / சான்றுகள்

1) கடன் தாரர் மற்றும் பிணையதாரருக்கு அனைத்து பிடித்தங்களுடன், ஊதியம் வழங்கும் அலுவலரால் வழங்கப்பட்ட ஊதியச்சான்றூ ( படிவம்-28)
2) சம்மந்தப்பட்ட பணியாளர் சங்கத்தில் மற்றும் வங்கியில் கடன் பாக்கி இல்லை என்பதற்கான சான்று.
3) பிணையதாரரிடம், பிணையதாரராக இருப்பதற்கு சம்மத ஒப்புதல் கடிதம்.
4) கடன் தாரர் மற்றும் பிணையதாரர், புகைப்படங்கள் ஊதியம் வழங்கும் அலுவலரால் அவற்றில் கையொப்பமிட்டு சான்று செய்ய வேண்டும்.
5) சம்மந்தப்பட்ட பணியாளர் மீது வழக்கு, குற்றச்சாட்டு நடவடிக்கை குற்றவியல் நடவடிக்கை தண்ட வழக்கு எதுவும் இல்லை என்பதற்கு சான்று.