1. | கடன் திட்டத்தின் பெயர் |
கூட்டு பொறுப்புக்குழுவுக்கு கடன் |
---|---|---|
2. | கடன் பெற தகுதி உள்ளவர்கள் |
1) சிறு, குறு மற்றும் குத்தகை விவசாயிகள் |
3. | குழுவில் உறுப்பினராவதற்கு தகுதிகள் |
1) சிறு, குறு மற்றும் குத்தகை விவசாயிகள் |
4. | ஊக்குநர் |
கூட்டுப்பொறுப்புக்குழுவில் ஒருவரை பொறுப்புடன் செயல்பட ஊக்குனராக நியமிக்கலாம்.. |
5. | தொடக்கச் சங்கத்தில் உறுப்பினர் |
கூட்டுப்பொறுப்புக்குழு, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கத்தில் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 21(1) (அ) (iv) இன்படி உறுப்பினராகலாம் |
6. | சுய உதவிக்குழுக்கள் போன்ற செயல்பாடு |
கூட்டுப்பொறுப்புக் குழுக்கள் சுய உதவிக்குழுக்கள் போன்ற செயல்பட வேண்டும். இவர்கள் வாரம் ஒருமுறை சந்திக்க வேண்டும். உறுப்பினர்களிடையே சிக்கன நிதி சேகரிக்க வேண்டும். இவர்களது கூட்ட நடவடிக்கை தொடர்பாக பதிவேடு பேணப்பட வேண்டும். பெற்ப்படும் சிக்கன நிதிக்கு கணக்கு வைத்து வரவேண்டும். |
7. | அலுவலர்கள் பங்கு |
ஆரம்ப நிலையில் கூட்டுப் பொறுப்புக்குழுவின் 2-3 கூட்டங்களில் இணைப்பதிவாளர் தனி அலுவலர் (மத்திய கூட்டுறவு வங்கி) துணைப்பதிவாளர் மத்திய வங்கியின் கள அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்ட சங்கச் செயலாளர்கள் கலந்து கொண்டு குழுக்கள் சிறப்பாக செயல்பட வழிகாட்ட வேண்டும் |
8. | திட்டத்தின் நோக்கம் |
1) இலகுவில் வங்கியை அணுக முடியாத மேலே கூறப்பட்ட விவசாயிகள் உரிய பயிற்சி பெற்று ஒருங்கிணைந்து இடுபொருட்கள் பெற்று விவசாயம் மற்றும் இதர பணிகளை மேற்கொண்டு சேமிப்பு மூலம் தன்னிரைவு பெற வேண்டும் என்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். |
9. | குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை / அமைப்பு |
ஒவ் வொரு கூடுப்பொறுப்புக்குழுவிலும் 4 முதல் 10 விவசாயிகள் இருக்கலாம். இது ஒருமுறை சாரா அமைப்பாகும். அதனால் பதிவு செய்ய வேண்டிய தேவை இல்லை. இக்குழுவில் ஆண்/பெண் தனியாகவோ அல்லது இருபாலரும் கலந்தோ இருக்கலாம். இக்குழு உறுப்பினர்கள் இணைந்து கூட்டாக கடன்பெறுபவார்கள். கடன் வசூலுக்கும் உறுதிமொழி கொடுப்பார்கள். ஏற்கனவே செயல்படும் விவசாயக்குழுக்களை கூட்டுப்பொறுப்புக் குழுக்களாக மாற்றலாம். |
10. | சேமிப்பு கணக்கு |
1) குழுக்கள் ஒருங்கிணைந்து அவர்களாகவே ஒரு சேமிப்பு கணக்கு வங்கியில் இணை உறுப்பினராக வேண்டும். |
11. | சுழல் நிதி |
1) குழு ஒருங்கிணைந்து செயல்பட தயாரான பின்னர் ஒவ் வொரு கூட்டுக்குழுவுக்கும் அதன் கூட்டுக்கணக்கில் ரூ10,000/- விடுவிக்கப்பட வேண்டும். |
12. | அறுவடை |
1) அறுவடை மற்றும் அறுவடையைத் தொடரும் பணிகளை கூட்டுப்பொறுப்புக்குழு ஒருங்கிணைத்து விளைப்பொருட்களை விற்பனைக்கு ஏற்பாடு செய்து நல்ல நிலை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். |
13. | சுழல் நிதி மற்றும் பயிர்க் கடன் |
1) குழுவுக்கு வழங்கப்படுகின்ற சுழல் நிதி மானியமாக வழங்கவேண்டும். |
14. | கடனுக்கு ஆதாரம் |
1) கடனுக்கு சொத்து ஆதாரம் தேவை இல்லை. இருப்பினும் உறுப்பினர்கள் கூட்டாக வழங்கும் உறுதிமொழி ஆவணம் மற்றும் பயிர் செய்வதற்கான ஆதார ஆவணங்களைப் பெற்று பேண வேண்டும். |
15. | காப்பீடு |
1) தனிநபர் விபத்து காப்பீடு பயிர் காப்பீடு ஆகியவற்றை மற்ற பயிர்கடன் களுக்கு வழங்கப்படுவது போன்று பின்பற்றப்பட வேண்டும். |
16. | வழங்கவேண்டிய அசல் ஆவணங்கள் |
வாடிக்கையாளர்களிடம் கீழ்க்கண்ட ஆவணங்கள் பெற வேண்டும். |