logo


1 / 3
2 / 3
3 / 3




    சூரிய தகடு பயன்படுத்தி பம்ப் செட் அமைத்திட கடன்



1.

கடன் திட்டத்தின் பெயர்

சூரிய தகடு பயன்படுத்தி பம்ப் செட் அமைத்திட கடன்

2.

கடன் தொகை (அதிக பட்சம்)

1) தளவாடம் மற்றும் நடைமுறை மூலதன கடனாக ரூ 50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்)
2) ஒருங்கிணைந்த சிறுதொழில் தொடங்குவதற்கு, தொழிலில் தன்மைக்கேற்ப ரூ10,00,000/-(ரூபாய் பத்து லட்சம் மட்டும்) வரை வழங்கலாம்.

3.

நோக்கங்கள்

சூரிய தகடு பயன்படுத்தி ஏ.சி. பம்ப் செட் அமைக்க விவசாயிகளுக்கு கடன் வழங்குதல்

4.

பம்ப்செட் குதிரைத்திறன்

5 குதிரைத் திறனுக்கு ரூ4 லட்சம் அல்லது சூரிய தகடு பயன்படுத்தி பம்ப் செட் அமைக்க தேவையானவற்றை வினியோகிக்கும் நிறுவனத்தின் மதிப்பான ரூ3,99,822/- (மூன்று லட்சத்து தொண்ணூற்று ஒன்பதாயிரத்து எண்ணூற்று இருபத்தி இரண்டு மட்டும்) இதொல் எது குறைவோ அத்தொகை கடனாக வழங்கப்படும்.
2) இக்கடனுக்கு மானியம் 80% வழங்கப்படுவதால் மொத்த மதிப்பீட்டில் 20% கடனாக அனுமதிக்கபடும்.

5.

மானியம்

1) தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் ( NADP) கீழ் வழங்கப்படும் மானியம் -----------> 50%
2) தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி கழகத்தின் மானியம் ( TamilNadu Energy Development Agency from MNRE)-----> 30%

மொத்த மானியம் --------------> 80%
3) விவசாயிகளின் பங்கு ----------> 20%

6.

திட்ட மதிப்பு

1) 5 குதிரைத் திறன் கொண்ட பம்ப் செட் மதிப்பு ---------> ரூ.3,99,822
2) 80% மானியம் -----------------------> ரூ 3,19,858
3) விவசாயி செலுத்த வேண்டிய மீதித்தொகை -----> ரூ 79,964 ( 20%)

7.

விவசாயிகளின் பங்களிப்பு

விவசாயிகளின் பங்களிப்பு கடன் ரூ 1,00,000/- ( 20 விழுக்காட்டுக்கு உட்பட்டு)

8.

தவணைக்காலம்

மூன்று வருடங்கள் 36 மாதங்கள்

9.

பினையம்

ரூ 1,00,000/- ஒரு லட்சம் வரை தனி நபர் பிணையம்
ரூ 1,00,000/- ஒரு லட்சத்துக்கு மேல் கடன் அளவைப்போன்று இரண்டு மடங்கு சொத்து அடமானம்.

10.

வட்டி

வட்டி விழுக்காடு 12%

11.

கடன் அனுமதிக்கான நடைமுறை

1) திட்டத்தை செயல்படுத்தும் ஒருங்கிணைப்புத்துறை (Nodal Agency) தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்திலிருந்து பயனாளிகள் பட்டியல் பெற வேண்டும்.
2) கடன் மனுவை உரிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
3) தொடக்கச் சங்கங்கள் மத்திய கூட்டுறவு வங்கியில் மறு நிதி உதவி பெற்று கடன் வழங்க வேண்டும்.

12.

கடன் பட்டுவாடா செய்தல்

1) தொடக்க சங்கம் காசோலை தொடர்புடைய நிறுவனத்திற்கு நேரடியாக நிறுவனத்தின் பெயரில் வழங்க வேண்டும்.
2) பம்ப் செட் நிறுவப்பட்ட உடன், உபயோகிப்புச் சான்றிதழை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

13.

இணைக்க வேண்டிய ஆவணங்கள்

1) ரூபாய் ஒரு லட்சம் வரை - 10(1) சிட்டா அடங்கல் தனி நபர் பிணையப் பத்திரம்
2) ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேல் 10(1) சிட்டா அடங்கல் நில உரிமை ஆவணம் அசல்..