logo


1 / 3
2 / 3
3 / 3




    சிறு சாலை போக்குவரத்து வாகனக்கடன்



1.

கடன் திட்டத்தின் பெயர்

சிறு சாலை போக்குவரத்து வாகனக்கடன்

2.

கடன் தொகை ( அதிக பட்சம்)

விலைப்பட்டியலில் 75 விழுக்காடு அல்லது ரூ 10/- லட்சம் இதில் எது குறைந்ததோ அத்தொகை கடனாக வழங்கலாம்

3.

கடன் நோக்கம்

வாகனக் கடன்

4.

தவணைக்காலம்

1) முதல் தவணை 3 (மூன்று) மாதங்களுக்குப் பின்னர் செலுத்த வேண்டும். ( Moratorium Period)
2) முதல் தவணையுடன் சேர்த்து 48 மாத சம தவணைகள் வட்டியுடன் (EMI) செலுத்த வேண்டும்.

5.

விண்ணப்பதாரரின் தகுதி

இலகு ரக நடப்பில் உள்ள ஓட்டுநர் உரிமம் பெற்றவராக இருக்க வேண்டும்

1) போக்குவரத்து ஓட்டுனராக பணிபுரிந்த முன் அனுபவம் உள்ளவர்.
2) ஒன்றுக்கு மேற்படாத வாகனம் வைத்திருப்பவர் ( ஒரு வாகனம் மட்டும் வைத்திருப்பவர்)
3) போக்குவரத்து நிறுவனத்தில் பணிபுரிந்த முன் அனுபவம்.
4) கடன் பெறும் வாகனத்தைச் சேர்த்து இரண்டு வாகனங்களுக்கு மேல் உரிமையாளராக இல்லாமல் இருப்பவர்.
5) ஆனால் இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி ( Small Industries Development Bank of India) 20 வாகனங்கள் வரை கடன் வழங்க மறுநிதி (Refinance) உதவி செய்கிறது.

6.

இணை உறுப்பினர்கள்

1) கடனுக்கு விண்ணப்பிப்பவர் மற்றும் பிணையதாரர் இணை உறுப்பினர் கட்டணமாக ரூ100/- செலுத்த வேண்டும்.
2) கடன் பெறுபவர் மற்றும் பிணையதாரர் வங்கியின் செயல் எல்லையில் வசிக்க வேண்டும்.
3) கடன் பெறுபவர் கணக்கு திறக்க வேண்டும்.

7.

விளிம்புத் தொகை

கடன் பெறுபவர் அவரது பங்காக 10% வங்கியில் செலுத்த வேண்டும்.

8.

சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

1) வாகனத்தின் விலைப்பட்டியல் அசல்
2) கடனுக்கு ஈடாக காட்டும் சொத்தின் மூலப்பத்திரம் ( Original)
3) 30 ஆண்டுகளுக்கான வில்லங்கச் சான்று ( Encumbrance Certificate)
4) திட்ட அறிக்கை ( Project Report) (பட்டயக்கணக்காளரின் சான்றிதழுடன்)
5) பதிவுச் சான்றிதழ் புத்தகத்தில் வங்கியின் பெயரும் சேர்க்கப்பட்டு வங்கியில் நகல் ஒப்படைக்கப்படவேண்டும். ( Copy of Registration)
6) ஆதார் அட்டை
7) முகவரி ஆதாரம் / அடையாள அட்டை
8) புகைப்படம் ( பாஸ்போர்ட் சைஸ்) 3
9) ஓட்டுநர் உரிமம்

9.

வட்டி விழுக்காடு

1) ரூ2/- ( இரண்டு) லட்சம் வரை - 12%
2) ரூ2/- ( இரண்டு) லட்சத்திற்கு மேல் 12%

10.

சொந்த நிதியில் வழங்கும் கடன்

1) சொந்த நிதியில் - 12%
2) தவணை தவறிய வட்டி - 3%

11.

பிணையம்

1) அசையா சொத்து கடன் அளவில் 2 ( இரண்டு) மடங்குகள் வரை கொடுக்க வேண்டும்.
2) கடனுக்கு வாங்கும் வாகனம் ( Hypothecation) மண்டல வாகன போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்வதோடு பதிவுச் சான்றிலும் பதிவு செய்யப்பட வேண்டும். வாகனத்திலும் சிறிய அளவில் எழுத வேண்டும்.

12.

சட்ட ஆலோசகர் கட்டணம்

சட்ட கருத்துக்கு கட்டணம் கடன் தொகையில் 1% குறைந்தது ரூ500/- உச்ச அளவு ரூ 2,500/- வரை பெறலாம். + ஜி.எஸ்.டி

13.

காப்பீடு (Insurance)

1) வாகனம் வங்கி மற்றும் கடன் தாரர் கூட்டுப் பெயரில் அனைத்து இடர்களையும் உள்ளடக்கி காப்பீடு செய்ய வேண்டும்.
2) பதிவுச் சான்றிதழ் வாகனம் வங்கிக்கு அடமானம் என்பதை குறிப்பிட வேண்டும்.
3) காப்பீடு ஒவ் வொரு ஆண்டும் வாகன உரிமையாளர் செலவில் புதுப்பிக்கப்படவேண்டும்.

14.

கடன் பட்டுவாடா செய்த பின்

1) வாகனத்தின் சாவி இரண்டில் ஒன்று வங்கியில் ஒப்படைக்க வேண்டும்.
2) காப்பீடு செய்யப்பட்ட ஆவணம் வங்கியால் பெறப்பட வேண்டும். வருடந்தோறும் கடன் தாரர் செலவில் புதுப்பிக்கப்பட்டு வங்கிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.